முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தென் கொரியாவுடன் ஹாட்லைன் சேவை: மீண்டும் தொடங்க கிம் ஜாங் உன் விருப்பம்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

தென் கொரியாவுடன் துண்டிக்கப்பட்ட ஹாட்லைன் தொடர்பை மீண்டும் கொண்டுவர விரும்புவதாக வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன் தெரிவித்துள்ளார்.

தென் கொரியாவுடன் சமாதானமாகப் போகும் தனது விருப்பத்தை தெரிவிக்கும் வகையில் அமைந்துள்ளது கிம் ஜாங் உன்னின் பேச்சு. அதே நேரம், பேச்சுவார்த்தைக்கான அமெரிக்காவின் விருப்பத்தை அவர் விமர்சித்துள்ளார். தனது பகைமையான கொள்கையை மாற்றிக்கொள்ளாமல் பேச்சுவார்த்தை பற்றிப் பேசுவது ஏமாற்றுவேலை என்று அவர் கூறியுள்ளார்.

அமெரிக்காவுடன் சேர்ந்து தென்கொரியா மேற்கொண்ட போர்ப் பயிற்சிக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த ஹாட்லைன் இணைப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் துண்டித்துக்கொண்டது வட கொரியா. வட கொரியாவின் வருடாந்திர நாடாளுமன்றக் கூட்டத்தில் பேசியபோது இந்த ஹாட்லைன் இணைப்பை மீண்டும் தொடங்கும் தனது விருப்பத்தைத் தெரிவித்தார் கிம்.

"தூதரகரீதியில் தொடர்பு கொள்வதைப் பற்றி அமெரிக்கா கூறுகிறது. ஆனால் சர்வதேச சமூகத்தை ஏமாற்றும், அடுத்தடுத்த அமரிக்க ஆட்சியாளர்களால் பின்பற்றப்படும் தமது பகைமையான கொள்கையை மறைத்துக்கொள்ளும் மலிவான உத்தி இது," என்று வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ.வில் வெளியான செய்து ஒன்று தெரிவித்துள்ளது.

 

மோசமடைந்த வட கொரிய - தென் கொரிய உறவுகளால் துண்டிக்கப்பட்ட இரு நாடுகள் இடையிலான தகவல் தொடர்பு இணைப்பு அக்டோபர் முதல் மீண்டும் தொடங்கப்படவேண்டும் என்ற தனது விருப்பத்தை வெளியிட்டுள்ளார். ஆனால், இரு நாடுள் இடையிலான உறவு மேம்படுவதோ, இப்போது உள்ளதைப் போல தொடர்ந்து வீழ்ச்சி அடைவதோ தென் கொரிய நிர்வாகிகளின் அணுகுமுறையை ஒட்டியே இருக்கும்" என்கிறது கேசிஎன்ஏ செய்தி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து