முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஈகுவடாரில் சிறை கைதிகள் மோதல்: பலி எண்ணிக்கை 116 ஆக உயர்வு

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

ஈகுவடார் நாட்டில் உள்ள சிறைச்சாலையில் இரு தரப்பினர் இடையே ஏற்பட்ட மோதலில் பலியானோர் எண்ணிக்கை 116 ஆக அதிகரித்துள்ளது.

தென்அமெரிக்க நாடான ஈகுவடாரின் குயாஸ் மாகாணத்தில் உள்ள துறைமுக நகரமான குயாகுவில் சிறைச்சாலை உள்ளது. இந்த சிறைச்சாலையில் கொலை, கொள்ளை, போதைப்பொருள் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கொடூர குற்றங்களில் ஈடுபட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். 

சிறையில் உள்ள கைதிகள் தனித்தனி குழுக்களாக பிரிந்து அவ்வப்போது கோஷ்டி மோதலிலும் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், குயாகுவில் சிறைச்சாலையில் கடந்த 3 தினங்களுக்கு முன் இருதரப்பு கைதிகளுக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அந்த மோதல் பெரும் கலவரமாக வெடித்தது. ‘லாஸ் வெகோஸ்' மற்றும் ‘லாஸ் கேனரஸ்' என்று அழைக்கப்படும் இருதரப்பு கைதிகள் கத்தி உள்ளிட்ட கூர்மையான ஆயுதங்களால் ஒருவரையொருவர் சரமாரியாக தாக்கிக்கொண்டனர்.

மேலும் அவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதோடு, கையெறி வெடிகுண்டுகளையும் பயன்படுத்தினர். கலவரம் சிறைக்காவலர்களின் கட்டுப்பாட்டை மீறி சென்றதால் கலவர தடுப்பு பிரிவு போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் சிறைச்சாலைக்கு வரவழைக்கப்பட்டனர். இதனை தொடர்ந்து 5 மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கலவரம் முழுவதும் கட்டுக்கொள் கொண்டுவரப்பட்டது. ஆனாலும், இந்த கலவரத்தில் முதற்கட்டமாக 24 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. மேலும் 40-க்கும் மேற்பட்ட கைதிகள் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

 

இந்நிலையில், ஈகுவடார் சிறைச்சாலை கலவரத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 116ஆக அதிகரித்துள்ளது. இதில் 6 கைதிகள் தலை துண்டித்து கொல்லப்பட்டனர். மேலும் 52-க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களில் மேலும் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து