முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கானிஸ்தானில் கடத்தப்பட்ட இந்தியர் பன்ஸ்ரீலால் விடுதலை

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

காபூல் : மர்ம நபர்களால் கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா விடுதலை செய்யப்பட்டு தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார்.

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் வசித்து வருபவர் பன்ஸ்ரீலால் அரிண்டா (வயது 50). இந்தியரான இவர் அங்கு மருத்துவ பொருட்கள் விற்பனை செய்யும் கடை ஒன்றை நடத்தி வருகிறார். கடந்த 14-ந்தேதி வழக்கம் போல கடைக்கு சென்ற இவரை, கடைக்கு அருகே வைத்து மர்ம நபர்கள் சிலர் கடத்தி சென்றனர். துப்பாக்கி முனையில் அரங்கேற்றப்பட்ட இந்த கடத்தல் சம்பவம் இந்தியாவிலும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

 

இந்த நிலையில், கடத்தப்பட்ட பன்ஸ்ரீலால் அரிண்டா விடுதலை செய்யப்பட்டார். அவர் தற்போது தனது மூத்த சகோதரர் அசோக் லாலுடன் இருப்பதாக இந்திய உலகம் மன்றத்தின் தலைவர் புனீத் சிங் சந்தோக் தெரிவித்து உள்ளார். இது பன்ஸ்ரீலாலின் குடும்பத்துக்கு பெருத்த நிம்மதியை கொடுத்து உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து