முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் போட்டியில் ஹர்‌ஷல் படேல் புதிய சாதனை

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய்: சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை பெங்களூர் அணி வீரர் ஹர்ஷல் படேல் பெற்றுள்ளார்.

பெங்களூரு வெற்றி...

ஐ.பி.எல். போட்டியில் ராஜஸ்தானை வீழ்த்தி பெங்களூர் அணி 7-வது வெற்றியை பெற்றது. துபாயில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய ராஜஸ்தான் ராயல்ஸ் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 149 ரன் எடுத்தது. இதனால் பெங்களூர் அணிக்கு 150 ரன் இலக்காக இருந்தது. இவின் லீவிஸ் 37 பந்தில் 58 ரன்னும் (5 பவுண்டரி, 3 சிக்சர்), ஜெய்ஷ்வால் 22 பந்தில் 31 ரன்னும் (3 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்தனர். ஹர்‌ஷல் படேல் 3 விக்கெட்டும், யசுவேந்திர சாகல், சபாஷ் அகமது தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

7-வது வெற்றி... 

பின்னர் ஆடிய ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் 17.1 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 153 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேக்ஸ்வெல் 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி 1 சிக்சர்), ஸ்ரீகர் பரத் 35 பந்தில் 44 ரன்னும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர். பெங்களூர் அணி பெற்ற 7-வது வெற்றி இதுவாகும். இதன் மூலம் அந்த அணி புள்ளிகள் பட்டியலில் தொடர்ந்து 3-வது இடத்தில் உள்ளது. ராஜஸ்தான் அணி 7-வது தோல்வியை தழுவியது. அந்த அணி 8 புள்ளிகளுடன் 7-வது இடத்தில் உள்ளது.

புதிய சாதனை...

இந்த ஆட்டத்தில் 3 விக்கெட் கைப்பற்றியதன் மூலம் பெங்களூர் அணியின் வேகப்பந்து வீரர் ஹர்‌ஷல் படேல் 26 விக்கெட்டை எடுத்து தொடர்ந்து முதல் இடத்தில் உள்ளார். 11 ஆட்டத்தில் அவர் 26 விக்கெட் எடுத்துள்ளார். இதன்மூலம் ஹர்‌ஷல் படேல் ஐ.பி.எல். போட்டியில் புதிய சாதனை படைத்துள்ளார். சர்வதேச போட்டியில் விளையாடாத ஒருவர் ஐ.பி.எல்.லில் அதிக விக்கெட் சாய்த்தவர் என்ற பெருமையை அவர் பெற்றார்.

முறியடிப்பு... 

இதற்கு முன்பு 2015-ம் ஆண்டு ஐ.பி.எல். போட்டியில் இதே பெங்களூர் அணியை சேர்ந்த யசுவேந்திர சாகல் 23 விக்கெட் கைப்பற்றி இருந்தார். அதை ஹர்‌ஷல் படேல் முறியடித்தார். ஒரு சீசனில் அதிக விக்கெட்டை கைப்பற்றிய வீரராக பிராவோ உள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் வீரரான அவர் 2013 ஐ.பி.எல்.லில் 32 விக்கெட் கைப்பற்றினார். அவரது சாதனையை நோக்கி ஹர்‌ஷல் படேல் செல்கிறார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து