முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பி.எஸ்.ஜி அணிக்காக முதல் கோல்

வியாழக்கிழமை, 30 செப்டம்பர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

குல்தீப் யாதவுக்கு ‘ஆபரேஷன்’

ஐ.பி.எல். கிரிக்கெட்டுக்கான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்திருந்த இந்திய இடக்கை சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ், பயிற்சியின்போது வலது கால்முட்டியில் ஏற்பட்ட காயம் காரணமாக விலகினார். இந்த நிலையில் கால்முட்டி காயத்தை சரிசெய்ய அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. ‘ஆபரேஷன் வெற்றிகரமாக நடந்தது. 

காயத்தில் இருந்து மீள்வதற்கான மருத்துவம் மற்றும் பயிற்சி நடைமுறைகள் தொடங்கியுள்ளன. இந்த சமயத்தில் எனக்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் நன்றி. முழுமையாக குணமடைந்து மிக விரைவில் களம் திரும்ப விரும்புகிறேன்’ என்று குல்தீப் யாதவ் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

__________

பி.எஸ்.ஜி அணிக்காக முதல் கோல்

கால்பந்து உலகின் நட்சத்திர ஆட்டக்காரரான லியோனல் மெஸ்ஸி, பிஎஸ்ஜி கால்பந்தாட்ட கிளப் அணிக்காக தனது முதல் கோலை பதிவு செய்துள்ளார். அதோடு அந்த அணி 2 - 0 என மான்செஸ்டர் சிட்டி அணியை வீழ்த்தி இருந்தது.  முன்னதாக பார்சிலோனா அணிக்காக விளையாடி வந்தார் மெஸ்ஸி. தற்போது இரண்டு ஆண்டுகளுக்கு PSG அணிக்காக விளையாட ஒப்பந்தம் செய்துள்ளார் மெஸ்ஸி. அந்த அணிக்காக 30-ம் எண் கொண்ட ஜெர்ஸியில் விளையாடி வருகிறார் அவர். 

நான்கு ஆட்டங்கள் விளையாடி மெஸ்ஸி தனது முதல் கோலை பி.எஸ்.ஜி அணிக்காக பதிவு செய்துள்ளார். 2018-க்கு பிறகு முதல் முறையாக லீக் சுற்றின் குழுப்பிரிவு ஆட்டத்தில் மான்செஸ்டர் சிட்டி அணி தோல்வியை தழுவியுள்ளது.   

_____________

கோலி மீது சீனியர்கள் புகார் 

ஐ.சி.சி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிக்கு முன்னால் ரவிசாஸ்திரியாகட்டும் கோலியாகட்டும் அந்த பெரிய போட்டியை மட்டம் தட்டி இது இன்னொரு டெஸ்ட் போட்டிதான் ஒன்றுமேயில்லை. இந்த டெஸ்ட் போட்டியின் வெற்றி தோல்வி எங்களின் பெருமைகளை சாய்த்து விடாது, கடந்த 2, இரண்டரை ஆண்டுகளாக நாங்கள் ஆடியது இதையெல்லாம் விட பெரியது என்று ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியை ஒரு பொருட்டாகவே கருதாமல் பேட்டியளித்தனர். கடைசியில் நியூசிலாந்து கோப்பையைத் தட்டிச் சென்றனர்.

டெஸ்ட் போட்டியை தோற்ற பிறகு விராட் கோலி அளித்த பேட்டியில், “ரன் எடுக்க வேண்டும் என்ற மனநிலையில் ஆட வேண்டும். அவுட் ஆவதைப் பற்றியே கவலைப்பட்டு பவுலரை பார்முக்குக் கொண்டு வரக்கூடாது” என்று புஜாரா, ரகானே பேட்டிங்கை விமர்சித்தார் கோலி. இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகே ஜெய் ஷாவுக்கு ரகானே, புஜாரா தொலைபேசியில் கோலியின் கேப்டன்சி குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளதாக ஆங்கில நாளேடு ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இரண்டு மூத்த வீரர்கள் புகார் தெரிவித்தவுடன் மற்ற வீரர்களிடமிருந்தும் பிசிசிஐ கருத்துக் கேட்டுள்ளதா தெரிகிறது.

 

___________

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து