முக்கிய செய்திகள்

நடிகர் சிவாஜி கணேசன் பிறந்தநாள்: 'டூடுல்' வெளியிட்டு கூகுள் கவுரவம்

Google 2021 10 01

தமிழ் சினிமாவின் திறந்தவெளிப் பல்கலைக்கழகம் எனவும், நடிகர் திலகம் எனவும் போற்றப்பட்ட சிவாஜி கணேசன் பிறந்த தினமான நேற்று கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக் கவுரவப்படுத்தியுள்ளது.

முக்கிய தினங்களின்போது, முக்கியப் பிரமுகர்களின் பிறந்ததினத்திலும் கூகுள் தனது தேடுபொறி பக்கத்தில் வித்தியாசமான டூடுல்களை வெளியிடுவது வழக்கம். அந்தவகையில் நேற்று சிவாஜி கணேசனின் 93வது பிறந்தநாளுக்காக கூகுள் டூடுல் வெளியிட்டு அவரைக் கவுரவப்படுத்தியுள்ளது.

அந்த டூடுலில் சிவாஜியின் மூன்று கெட்டப் அடங்கிய ஓவியங்களும் அதன் பின்னணியில் படச்சுருளும் உள்ளன. பெங்களூருவைச் சேர்ந்த ஓவியர் நூப்பூர் ராஜேஷ் சோக்ஸி இந்த டூடுலைத் தயாரித்ததாக கூகுள் தெரிவித்திருக்கிறது.

 

இந்த டூடுலை நடிகர் சிவாஜியின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனுமான விக்ரம் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த ட்வீட்டில் அவர், "இதோ பெருமைமிகு சிவாஜி கணேசனின் 94-வது பிறந்தநாளை ஒட்டி கூகுள் டூடுல் வெளியிட்டுள்ளது. கூகுள் இந்தியாவுக்கும், இந்த டூடுலை உருவாக்கிய நூபூர் சோக்ஸிக்கும் நன்றி. இது இன்னொரு பெருமித தருணம். அவரை இன்றும் நேசிக்கிறேன். அவரது இழப்பின் வலி ஒவ்வோர் ஆண்டும் கூடுகிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து