முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கியின் ஆட்டோ டெபிட் முறையில் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன

Reserve-Bank 2021 09 15

ரிசர்வ் வங்கியின் புதிய ஆட்டோ டெபிட் விதிகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. டெபிட்/கிரெடிட் கார்டுகள் அல்லது மொபைல் வாலட்களை வழக்கமான ஆட்டோ டெபிட் நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தும் வங்கி கணக்கு பயனர்கள் இந்த மாற்றத்தால் பாதிக்கப்படுவார்கள்.

வங்கி கணக்கு வைத்திருப்பவர்கள் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்றவற்றை பயன்படுத்தும் நிலையில் ஓடிடி தளங்கள், செல்போன் மற்றும் இதர பல சேவைகளுக்கு கார்டுகளை பயன்படுத்துகின்றனர். இதில் பெரும்பாலும் கிரெடிட் கார்டு தகவல்களை தந்துவிட்டால் மாதாமாதம் பணம் ஆட்டோமேட்டிக்காக எடுத்துக் கொள்ளப்படும் நிலை உள்ளது.

இந்நிலையில் தற்போது ரிசர்வ் வங்கி கொண்டு வந்துள்ள புதிய நடைமுறைப்படி ரூ.5 ஆயிரத்துக்கு மேற்பட்ட  ஆட்டோ டெபிட் வாடிக்கையாளர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் ஓடிபி வழியாக அனுமதி கேட்கப்படும். வாடிக்கையாளர்கள் அனுமதி அளித்தால் மட்டுமே அந்த பணம் டெபிட் செய்யப்படும் என கூறப்பட்டுள்ளது. இந்த புதிய நடைமுறை அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

 

தற்போது நடைமுறைக்கு வந்துள்ள இந்த புதிய முறையால், வாடிக்கையாளர்கள் தங்கள் மொபைல் பில், மின்சாரக் கட்டணம், வாட்டர் போன்ற இதர பயன்பாட்டு பில்கள், நெட்ஃப்ளிக்ஸ் மற்றும் அமேசான் பிரைம் மாதிரியான ஓ.டி.டி இயங்குதள கட்டணங்கள் மற்றும் ஊடக சந்தா கட்டணங்கள் ஆகியவற்றைச் செலுத்த ஆட்டோ டெபிட் ஆப்ஷனைப் இனி பயன்படுத்த முடியாது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து