முக்கிய செய்திகள்

யு.பி.எஸ்.சி தேர்வில் வெற்றி பெற்ற தமிழக மாணவர்களுக்கு முதல்வர் தலைமையில் பாராட்டு விழா

Stelin 2021 09 27

இந்திய ஆட்சிப் பணி தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சென்னை அண்ணா மேலாண்மை நிலையத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் பாராட்டு விழா நடைபெற்றது. 

இந்த பாராட்டு விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது., 

சமூக நீதியை கடைப்பிடிக்கும் வகையில் அண்ணா மேலாண்மை நிலையம் தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழ்நாட்டில் அண்ணா மேலாண்மை நிலையம் அமைந்துள்ளது. இந்திய குடிமைப் பணி தேர்வில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 36 பேர் வெற்றி பெற்றுள்ளனர். தமிழ்நாட்டிலிருந்து தேர்வான 36 பேரில் 16 பேர் அண்ணா மேலாண்மை நிலையத்தில் பயிற்சி பெற்றவர்கள். 

''அரசுப் பணி என்பது இளைஞர்களால் அதிகம் விரும்பப்படும் பணியாக உள்ளது. குறிப்பாக இந்திய ஆட்சிப் பணி நாட்டில் பல இளைஞர்களின் கனவாக உள்ளது. மாற்றுத்திறனாளி மாணவர் ஒருவர் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. 'மக்களிடம் செல், அவர்களோடு வாழ், அவர்களிடமிருந்து கற்றுக்கொள், அவர்கள் தருவதை பெற்றுக்கொள், அவர்களை மேம்படுத்து' என்ற பேரறிஞர் அண்ணாவின் கருத்தை உள்வாங்கி மக்கள் பணியாற்றிட வாழ்த்துகிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து