முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை அணிக்காக 100 கேட்ச்சுகள்: புதிய மைல்கல்லை எட்டிய 'டோனி'

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் டி20 தொடரில் சென்னை அணிக்காக அந்த அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி புதிய மைல்கல்லை எட்டியுள்ளார். சென்னை அணிக்காக 100 கேட்சுகளை விக்கெட் கீப்பர் டோனி பிடித்துள்ளார்.

சென்னை வெற்றி...

ஷார்ஜாவில் நடந்த ஐ.பி.எல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டத்தி்ல் சன்ரைசர்ஸ் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இந்த வெற்றியின்மூலம் சென்னை அணி 11 போட்டிகளி்ல் 9 வெற்றிகள், 2 தோல்விகள் 18 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்கவைத்து, ப்ளேஆஃப் சுற்றையும் உறுதி செய்துள்ளது. ஐ.பி.எல் தொடரில் 11-வது முறையாக சென்னை அணி ப்ளே ஆஃப் சுற்றுக்குள் செல்கிறது.

மூன்று கேட்ச்சுகள்...

இந்தப் போட்டியில் சென்னை அணியின் கேப்டனும்,விக்கெட் கீப்பருமான டோனி 3 கேட்சுகளைப் பிடித்தார். தொடக்க வீரர்கள் விருதிமான் சாஹா, ஜேஸன் ராய், பிரியம் கார்க் ஆகியோரின் விக்கெட்களை கேட்ச் பிடித்து டோனி வெளியேற்றினார். இதன் மூலம் ஐ.பி.எல் தொடரில்சென்னை அணிக்காக விக்கெட் கீப்பராக இருந்து 100 கேட்சுகளை டோனி பிடித்துள்ளார்.

ஸ்பெஷல் மைல்கல்...

இதுதொடர்பாக ஐ.பி.எல் நிர்வாகம் ட்விட்டரில் பதிவிட்ட கருத்தில் “ ஸ்பெஷல் கிரிக்கெட் வீரர், ஸ்பெஷல் மைல்கல், சென்னை அணிக்காக விக்கெட் கீப்பராகஇருந்து டோனி 100 கேட்சுகளைப் பிடித்துள்ளார்”எனத் தெரிவித்துள்ளது. 

டோனி முறியடித்தார்...

 

ஐ.பி.எல் தொடரில் விக்கெட் கீப்பராக இருந்து அதிகமான டிஸ்மிசல்களைச் செய்தவகையில் தினேஷ் கார்த்திக்கின் சாதனையை சமீபத்தில் டோனி முறியடித்தார். தினேஷ் கார்த்திக்கைவிட 8 டிஸ்மிசல்கள் அதிகமாக டோனி செய்துள்ளார். டோனி 215 போட்டிகளில் 158 டிஸ்மிசல்களைச் செய்துள்ளார். அதில் 119 கேட்சுகள், 39 ஸ்டெம்பிங்அடங்கும். ஐ.பி.எல் தொடரில் அதிகமான கேட்ச் பிடித்த வீரர்களில் சென்னை வீரர் சுரேஷ் ரெய்னா 98 கேட்சுகளையும், மும்பை இந்தியன்ஸ் வீரர் கெய்ரன் பொலார்ட் 94 கேட்சுகளையும் பிடித்து முன்னணியில் உள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து