முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். 44-வது லீக் - ஐதராபாத்தை வீழ்த்தி ப்ளேஆஃப் சுற்றுக்குள் நுழைந்தது சி.எஸ்.கே

வெள்ளிக்கிழமை, 1 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறி உள்ளது.

44-வது லீக் ஆட்டம்....

ஐ.பி.எல் 2021 தொடரின் 44-வது லீக் போட்டியில் சென்னை - ஐதராபாத் அணிகள் சார்ஜா மைதானத்தில் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சி.எஸ்.கே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. சி.எஸ்.கே-வில் சாம் குரணுக்கு பதிலாக டூவைன் பிராவோ அணியில் சேர்க்கப்பட்டிருந்தார். இதையடுத்து பேட்டிங்கை ஆரம்பித்த சன்ரைசர்ஸ் அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சி காத்திருந்தது. தொடக்க வீரர் ஜோசன் ராய் 2 ரன்னில் ஹேசில்வுட் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். அடுத்த வந்த கேப்டன் வில்லியம்சன் 11 ரன்களில் பிராவோ பந்துவீச்சில் சிக்கினார்.

சன்ரைசர்ஸ் திணறல்...

சி.எஸ்.கேவின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறிய சன்ரைசர்ஸ் அணி வீரர்கள் ரன் எடுக்க தவறினார்கள். சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ஐதராபாத் அணி சார்பில் அதிபட்சமாக தொடக்க வீரர் விருதமான் சஹா 44 ரன்கள் எடுத்தார். சென்னை அணியில் ஹேசில்வுட் 3 விக்கெட்களையும், பிராவோ 2 விக்கெட்களையும், ஜடேஜா மற்றும் சர்துல் தாகூர் தலா ஒரு விக்கெட்களை வீழ்த்தினர்.

135 ரன்கள் இலக்கு...

இதையடுத்து 135 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சி.எஸ்.கே அணியின் தொடக்க வீரர்கள் வழக்கம் போல் சிறப்பான அடிதளத்தை அமைத்தனர். ருதுராஜ் - டூபிளெசிஸ் ஜோடி முதல் விக்கெட்டிற்கு 75 ரன்கள் பார்டனர்ஷிப் அமைத்தனர். ருதுராஜ் 45 ரன்கள் எடுத்திருந்த போது ஹோல்டர் பந்துவீச்சில் கேட்ச் கொடுத்து வெளியேறினார்.

ப்ளே ஆஃப் சுற்று.... 

மொயின் அலி 17 ரன்களில் ரஷித் கான் பந்துவீச்சில் அவுட்டாக அடுத்து வந்த சுரேஷ் ரெய்னா 2 ரன்களில் வந்த வேகத்தில் அவுட்டாகி நடையை கட்டினார். நிதனமாக விளையாடிய டூ பிளெசிஸ் 41 ரன்களில் அவுட்டானார். இதனால் சி.எஸ்.கே அணி 108 ரன்களில் 4 விக்கெட்களை இழந்து இருந்தது. கேப்டன் டோனியும் அம்பாதி ராயுடும் பொறுமையாக விளையாடி சி.எஸ்.கே அணியை வெற்றி பெற செய்தனர். சி.எஸ்.கே அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.

சொன்னதை செய்த டோனி

கடந்த வருடம் பரிசளிப்பு விழாவில் நாங்கள் மீண்டும் முழு பலத்துடன் திரும்பி வருவோம் என்றேன். நாங்கள் அதற்குப் பெயர் பெற்றவர்கள். கடந்த வருடத் தோல்விகளில் இருந்து கற்றுக்கொண்டோம். அனைத்து வீரர்களும் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்கள். எனவே வீரர்களுக்கும் பயிற்சியாளர்களுக்கும் இந்த வெற்றி உரியது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து