முக்கிய செய்திகள்

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் வீரபாண்டி ராஜா காலமானார்: பிறந்தநாளில் நிகழ்ந்த சோகம் : குடும்பத்தினர் - உறிவனர்கள் கதறல்

சனிக்கிழமை, 2 அக்டோபர் 2021      தமிழகம்
Veerapandi-Raja 2021 10 02

Source: provided

சேலம் : தி.மு.கவில் தேர்தல் பணிக்குழு செயலாளரும், முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகனுமான வீரபாண்டி ராஜா நேற்று காலமானார். தனது பிறந்தநாளை கொண்டாட இருந்த நிலையில் இந்த சோகம் நிகழ்ந்துள்ளது. திடீர் மாரடைப்பு காரணமாக வீரபாண்டி ராஜா உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் இளைய மகன் ராஜா என்ற ராஜேந்திரன் கடந்த 2006-ம் ஆண்டு வீரபாண்டி தொகுதியிலிருந்து சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். சேலம் கிழக்கு மாவட்ட தி.மு.க செயலாளராக பணியாற்றிவந்த ராஜா, பின்னர் மாநில அளவிலான பொறுப்புகளுக்கு உயர்த்தப்பட்டு தி.மு.கவில் தேர்தல் பணிக்குழு செயலாளராகவும் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

வீரபாண்டி ராஜா, சேலம் மாவட்டத்தில் உள்ள அவரது சொந்த கிராமமான பூலாவரியில் தனது இல்லத்தில் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாட இருந்தார். பிறந்தநாளையொட்டி நேற்று காலை தனது தந்தை ஆறுமுகத்தின் படத்திற்கு மாலை அணிவித்த நிலையில் தொண்டர்களை சந்திக்க அவர் தயாராகிக் கொண்டிருந்தார். அப்போது திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

திடீரென மாரடைப்பு ஏற்பட்டு வீட்டில் மயங்கி விழுந்ததையடுத்து தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். எனினும் அவர் உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். ராஜாவின் உடல் தற்போது அவரது இல்லத்திற்கு கொண்டுவரப்பட்டு மக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து