முக்கிய செய்திகள்

மகாத்மா காந்தி கோட்பாடுகள் உலகுக்கு பொருத்தமானவை : பிரதமர் மோடி புகழாரம்

Modi 2020 12 18

Source: provided

புதுடெல்லி : மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை என பிரதமர் மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

மகாத்மா காந்தியின் 153-வது பிறந்த நாள் விழா நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரது சிலைக்கு மாலை அணிவித்து தலைவர்கள் மரியாதை செலுத்தினர். இந்த நிலையில் பிரதமர் மோடி மரியாதை செலுத்தும் விதமாக டுவிட்டரில் புகழாரம் சூட்டியுள்ளார்.

பிரதமர் மோடி தனது டுவிட்டரில் ‘‘மகாத்மா காந்தியின் உன்னதக் கோட்பாடுகள் உலகளாவிய ரீதியில் பொருத்தமானவை. மில்லியன் கணக்கானவர்களுக்கு வலிமை அளிக்கின்றன’’ என்று பதிவிட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து