முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ருத்ரதாண்டவம் - விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

போதைக்கு அடிமையான மகனின் சாவுக்கு காரணமான தனது மற்றொரு மகனையும் அவனது கூட்டாளிகள் இருவரையும் கொன்ற ஒரு தாயின் கதைதான் ருத்ர தாண்டவம் படம். ஃபிஸாஷ் பேக்கில் இருந்து துவங்குகிறது படம்.

ஒவ்வொரு கேஸாக கையில் எடுத்து அதனை நல்லபடியாக முடித்துக் கொடுக்கும் ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி ரிச்சர்ட். அவர் ஒரு இளம் குற்றவாளிக்கு நல்லது நினைக்கப் போய் அதனால் அவருக்கு வரும் பிரச்சனை. 200 கோடி மதிப்புள்ள போதைப் பொருளை பறிகொடுத்த மேனன் அவனது கூட்டாளிகளால் வரும் பிரச்சனை. குடும்ப பிரச்சனை என ஒரு கதைக்குள் பல கதைகளைச் சொல்லியிருப்பதாலும் படத்தின் நீளம் இரண்டே முக்கால் மணி நேரம் என்பதாலும் படம் வேகமாக நகர மறுக்கிறது.

படத்தின் வில்லன்  போதை பொருள் கடத்தல் தலைவனா? அரசியல் தலைவரா?  ஏன் கடத்துகிறார்? அவரது நோக்கம் என்ன  என்பதைச் சொல்லாதது  ஒரு புறம், கோர்ட்டில் வாதாடும் போது சட்டையில் சாதித் தலைவரின் படம் இருக்கிறது என்று கூறிவிட்டு பின்பு இல்லை, சாரி என மன்னிப்பு கேட்பது இன்னொருபுறம்,  பிசிஆர் சட்டத்தின் கீழ் தன்னை கைது செய்ய இன்ஸ்பெக்டரே வலியச் சொல்வது மற்றொருபுறம், ஞானஸ்தானம் அரசியல் வாதி வற்புறுத்தலால் கொடுக்கப்பட்டது என புரிதல் இல்லாமல் சொல்லியிருப்பது வேறொரு புறம், சிறையில் இருந்து வந்த கணவனை வீட்டுக்குள் வரவிடாமல் விரட்டும் கல் மனம் படைத்த  மனைவி என எதிலும் முழுமையடையாமல் படம் போகிறது. சண்டைக் காட்சிகள் குழந்தைகள் விளையாட்டு போல உள்ளது.

இசையிலாவது வேகத்தைக் கூட்டி இருக்கலாம்.  நான் படத்தில் வரும் இசையை காப்பி அடிக்காமல் அப்படியே போட்டிருக்கிறார் சற்று மாற்றி இருக்கலாம். கேமரா மற்றும் எடிட்டிங்கிலும் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தி இருக்கலாம். ஆனாலும், போலீஸ் அதிகாரியாக மிடுக்காக நடித்த ரிச்சட்டுக்கும் போதை ஆசாமி மாறனின் தாயாக நடித்த தீபாவுக்கும் பாராட்டுக்கள். திரெளபதி என்ற ஹிட் படத்தை கொடுத்த இயக்குனர் மோகன் இதில் அந்த வெற்றியை தக்க வைத்துக் கொள்ள தவறிவிட்டார். மொத்தத்தில் இப்படம், ரிச்சர்ட்டின் ஆப்ரேஷன் சக்சஸ். பட் ராமைய்யா இன் கோமா

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து