முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லிஃப்ட் - விமர்சனம்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

இயக்குனர் வினித் வரப்பிரசாத் இயக்கத்தில் கவின் -அமிர்தா நடித்திருக்கும் படம் லிஃப்ட். கதை : பெங்களூரிலுள்ள ஒரு ஐடி கார்ப்ரேட் ஆபிசிலிருந்து டிரான்ஸ்ஃபர் ஆகி சென்னை ஆபிசுக்கு டீம் லீடராக வருகிறார் கவின்.

அதே கம்பெனியில் எச்.ஆராக வேலை பார்த்து வருகிறார் நாயகி அம்ரிதா. கவின் மற்றும் அமிர்தா இருவருக்கும் ஏற்கனவே ஒரு சிறிய மோதல் இருந்துள்ளது. இந்நிலையில் கவின் தனது பணி முடித்து வீட்டுக்கு புறப்படும் மாலை நேரத்தில், மேலதிகாரியான பாலாஜி, ஒரு முக்கிய வேலையை கவினிடம் ஒப்படைத்து, முடித்துவிட்டு எனக்கு போன் செய்யுங்கள் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

இரவு நீண்ட நேரத்துக்கு பின்னர் அந்த வேலையை முடிக்கிறார் கவின். வேலை முடிந்த பிறகு வீட்டுக்கு செல்வதற்காக லிப்டிக்குள் செல்கிறார். கொஞ்ச நேரத்தில் லிப்டில் அமிர்தாவும் வருகிறார். அப்போது லிப்டில் பல அமானுஷ்ய சம்பவங்கள் நடக்கிறது.

அவர்களை வெளியில் போக விடாமல் தடுத்து பழிவாங்க நினைக்கிறது அந்த அமானுஷ்ய சக்திகள் ? அவர்கள் அதிலிருந்து விடுபட்டார்களா? வீட்டுக்கு சென்றார்களா? பின்னர் என்ன நடந்தது என்பதே கிளைமாக்ஸ். கவின் மற்றும் அமிர்தா நடிப்பு சிறப்பு. மொத்தத்தில் சற்று டைட் செய்து ஆயில் போட்டிருந்தால் நன்றாக ஓடி இருந்திருக்கும் இந்த லிஃப்ட்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து