முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்த வாரம் வெளியாகிறது டாக்டர் படம்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      சினிமா
Image Unavailable

Source: provided

சிவகார்த்திகேயன் நடிப்பில், நெல்சன் திலீப்குமார் எழுதி இயக்கியுள்ள படம் டாக்டர்.  இந்த வருடத்தின் மிகவும் எதிர்பார்க்கபடும் படங்களில் ஒன்றாக உள்ளது.

இப்படத்தை சிவகார்த்திகேயனுடன் இணைந்து,  KJR  கோட்டபாடி J ராஜேஷ் தயாரித்துள்ளார். உலகமெங்கும் அக்டோபர் 9 ஆம் தேதி, இப்படம் வெளியாகவுள்ள நிலையில்,  படக்குழுவினர் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது பேசிய சிவகார்த்திகேயன், இப்படத்தில் நான் எழுதிய பாடல்கள் மக்களுக்கு பிடித்திருப்பதால் தான் மகிழ்ச்சி அடைவதாக கூறினார்.

மொத்தமாகவே பத்து டயலாக் தான் படத்தில் உள்ளது, எல்லோரும் பேசிக்கொண்டிருக்கும் போது நான் பேசாமல் இருந்தது கஷ்டமாக இருந்தது என்றார். பின்னர் பேசிய இயக்குநர் நெல்சன், சிவகார்த்திகேயனே படத்தின் தயாரிப்பாளர் என்பதால், அது எனக்கு சவுகரியமாக இருந்தது.

படத்தில் வில்லனாக வினையும், காமெடியில் யோகிபாபுவும் கலக்கியுள்ளனர். விஜய் கார்த்திக்கின் ஒளிப்பதிவும்,  அனிருதின் இசையும் நிச்சயம் பேசப்படும். படமும் நினைத்தது போல அழகாக வந்திருக்கிறது என்றார்..  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து