முக்கிய செய்திகள்

இதயநோய்க்கு சிகிச்சை அளிக்க பயன்படும் அலிபாக் வெள்ளை வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு

White-onions 2021 10 03

Source: provided

அலிபாக் : மகாராஷ்டிரா மாநிலம் அலிபாக்கில் விளையும் புகழ்பெற்ற வெள்ளை  வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ராய்காட்  மாவட்டத்தில் உள்ள அலிபாக் பகுதியில் வெள்ளை வெங்காயம் விளைகிறது. 

புகழ்பெற்ற இந்த வெங்காயம் மருத்துவ தன்மை கொண்டது. இது இதய நோய்க்கு  சிகிச்சை அளிக்கவும், கொழுப்பை கட்டுப்படுத்தும் தன்மையும் கொண்டது.  மேலும்  இன்சுலினை சுரக்கும் தன்மையும் கொண்டது.  

இந்நிலையில் வேளாண்  துறையும், கொங்கன் வேளாண் பல்கலைக்கழகமும் இணைந்து வெள்ளை வெங்காயத்துக்கு  புவிசார் குறியீடு வழங்க கேட்டு கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 15-ல் விண்ணப்பம்  சமர்பித்திருந்தது.

இதையடுத்து இந்த பரிந்துரையை கடந்த 29-ம் தேதி ஆய்வு  செய்த மும்பை காப்புரிமை பதிவாளர் அலுவலகம் அலிபாக்கின் புகழ்பெற்ற வெள்ளை  வெங்காயத்துக்கு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதாக வேளாண் அதிகாரி ஒருவர்  தெரிவித்தார். இந்த பயிர் மூலம் ஏக்கர் ஒன்றுக்கு சராசரியாக ரூ.2 லட்சம்  வருவாய் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து