முக்கிய செய்திகள்

காங்கிரஸ் முன்னாள் எம்.எல்.ஏ. சுலோச்சனா ராவத் பா.ஜ.க.வில் இணைந்தார்

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021      இந்தியா
Sulochana-Rawat 2021 10 03

Source: provided

போபால் : மத்திய பிரதேச மாநிலத்தில் வருகிற அக்டோபர் 30 ஆம் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த தேர்தலுக்கு முன்பதாகவே காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.எல்.ஏ. சுலோச்சனா ராவத் ஆளும் பா.ஜ.க.வில் இணைந்துள்ளார். இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என கூறப்படுகிறது.

ராவத் மற்றும் அவரது மகன் விஷால் ராவத் ஆகிய இருவரும் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் அவர்களது முன்னிலையில் பா.ஜ.க.வில் இணைந்து உள்ளனர். இவர்கள் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில பா.ஜ.க. தலைவர் வி.டி. சர்மா கூறியுள்ளார்.

சுலோச்சனா 3  முறை  ஜோபாட் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அங்கு  அக்டோபர் 30-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து