முக்கிய செய்திகள்

கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு 30 நாளில் ரூ. 50,000 நிவாரணத்தொகை வழங்க வேண்டும் : சுப்ரீம் கோர்ட் உத்தரவு

Corona-dead 2021 10 04

Source: provided

புதுடெல்லி : கொரோனாவால் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு மாநில பேரிடர் நிதியில் இருந்து கொடுக்கப்படவுள்ள ரூ.50 ஆயிரத்தை முப்பது நாட்களின் வழங்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது.

கொரோனா காரணமாக உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 4 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்றும் அதேப்போன்று நோய் தொற்றால் இறந்தவர்களுக்கு சான்றிதழ் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து சமீபத்தில் உச்ச நீதிமன்றத்தில் குமார் பன்சால் மற்றும் ரீபக் பன்சால் ஆகியோர் தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த நிலையில் மேற்கண்ட வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி எம்.ஆர்.ஷா தலைமையிலான அமர்வில் மிண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது. மத்திய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்  கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு நிவாரணமாக ரூ.50ஆயிரத்தை மாநில பேரிடர் நிதியில் இருந்து வழங்கப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் முப்பது நாட்களில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணத் தொகை வழங்க வேண்டும். இருப்பினும் இறப்பு சான்றிதழில் கொரோனாவால் உயிரிழந்தார் என்று கூறப்படவில்லை எனக்கூறி நிவாரணத்தை வழங்க மாநில அரசுகள் மறுப்பு தெரிவிக்கக் கூடாது.

ஏற்கனவே கொரோனாவால் உயிரிழந்தவர்களின் இறப்புச் சான்றிதழில் 'கொரோனா மரணம்'  என குறிப்பிடவில்லை என்றாலும், இந்த நிவாரணத்தை பெறுவதற்கு உரிய அமைப்பை பாதிப்படைந்த குடும்பங்கள் அணுகலாம்.என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து