முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இதுவரை 90.79 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளன : மத்திய சுகாதாரத்துறை தகவல்

திங்கட்கிழமை, 4 அக்டோபர் 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : இந்தியாவில் இதுவரை 90.79 கோடி தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை நேற்று தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை நேற்று அளித்துள்ள தரவுகளின்படி, நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 23,46,176 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டதையடுத்து மொத்தம்  90,79,32,861 (இன்று காலை 7 மணிவரை) தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள் வருமாறு.,  18 - 44 வயது- முதல் தவணை -  36,74,65,954, இரண்டாம் தவணை -  8,83,14,532. 45 - 59 வயது - முதல் தவணை -  16,12,96,306, இரண்டாம் தவணை -  7,85,84,116, 60 வயதுக்கு மேல் - முதல் தவணை -  10,23,23,752, இரண்டாம் தவணை -  5,71,75,623, சுகாதாரத்துறை - முதல் தவணை -  1,03,73,789, இரண்டாம் தவணை -  89,34,169. முன்களப் பணியாளர்கள்- முதல் தவணை -  1,83,55,327, இரண்டாம் தவணை -  1,51,09,293. இதுவரை மொத்தம் 90,79,32,861 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து