முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் 50-வது லீக் ஆட்டம்: ஒற்றை கேட்சில் வெற்றியை தவறவிட்ட சென்னை அணி

செவ்வாய்க்கிழமை, 5 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் 50-வது லீக் ஆட்டத்தில் ஒற்றை கேட்சில் வெற்றி வாய்ப்பை தவறவிட்ட சென்னை அணி புள்ளிகள் பட்டியலில் 2-ம் இடத்திற்கு சறுக்கி உள்ளது.

முதலிடத்தில்...

ஐ.பி.எல் 2021 சீசனின் 50-வது போட்டி துபாய் மைதானத்தில் நடைபெற்றது. டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. 136 ரன்கள் மட்டுமே குவித்திருந்த சென்னைக்கு எதிராக 139 ரன்களை அடித்து புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தை பிடித்திருக்கிறது டெல்லி. அதற்கு சென்னையின் கிருஷ்ணப்பா கெளதம் விட்ட அந்த ஒரு கேட்ச் வலுவான காரணமாக அமைந்தது.

டெல்லி பந்துவீச்சு...

டாஸ் வென்ற டெல்லி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் களமிறங்கிய சென்னையின் தொடக்க ஆட்டக்காரர்களான ஃபாஃப் டூப்ளசி (10 ரன்கள்) மற்றும் ரிதுராஜ் கெய்க்வாட் (13 ரன்கள்) பவர் ப்ளே ஓவர்களுக்குள்ளேயே சொற்ப ரன்களில் வெளியேறி ஒட்டுமொத்த சென்னை ரசிகர்களுக்கும் அதிர்ச்சி கொடுத்தனர். அடுத்தடுத்து களமிறங்கிய ராபின் உத்தப்பா, மொயின் அலி ஆகியோரும் முறையே 19 மற்றும் 5 ரன்களுக்கு பெவிலியன் திரும்ப, சென்னையின் மிடில் ஆர்டர் பேட்டர்களின் தலையில் மொத்த சுமையும் இறங்கியது.

டோனி 18 ரன்கள்...

அம்பதி ராயுடு மிக பொறுப்போடு 43 பந்துகளுக்கு 55 ரன்களைக் எடுத்து அணியை கெளரவமான ஸ்கோரை நோக்கி நகர்த்தினார். மகேந்திர சிங் டோனி ஸ்ட்ரைக்கை சுழற்றினாலும், தன்னுடைய ஸ்ட்ரைக் ரேட்டை பராமரிக்க முடியாமல் திணறியது போலத் தெரிந்தது. 27 பந்துகளில் 18 ரன்கள் மட்டுமே குவித்திருந்தார். ஒருவழியாக தட்டுத்தடுமாறி சென்னை 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 136 ரன்களைக் குவித்தது சென்னை. துபாய் போன்ற பிட்சில் அதிக ரன்கள் குவிப்பது சிரமம் என்றாலும், டெல்லி போன்ற வலுவான அணிக்கு இது எளிதான ஸ்கோராக இருக்கலாம் என கூறப்பட்டது.

அக்ஸர் படேல்... 

டெல்லி அணியின் அக்ஸர் படேல் 4 ஓவர்களுக்கு 18 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து டூப்ளசி உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அஸ்வின் 4 ஓவர்களில் 20 ரன்களுக்கு உத்தப்பாவின் விக்கெட்டையும், அவேஷ் கான் 4 ஓவர்களில் 35 ரன்கள் கொடுத்து டோனியின் விக்கெட்டையும், அன்ரிக் நார்ட்ஜ் 4 ஓவர்களில் 37 ரன்கள் கொடுத்து ரிதுராஜின் விக்கெட்டையும் வீழ்த்தினர். ரபாடா விக்கெட்டுக்களை வீழ்த்தவில்லை என்றாலும், 4 ஓவர்களில் 21 ரன்களை மட்டுமே கொடுத்தார்.

தவான் - ப்ரித்வி...

136 அடித்தால் வெற்றி என களமிறங்கிய டெல்லி அணியின் ப்ரித்வி ஷா மற்றும் ஷிகர் தவான் இணை 24 ரன்களில் பிரிக்கப்பட்டது. 18 ரன்களோடு பெவிலியன் திரும்பினார் ப்ரித்வி. அடுத்த வந்த ஸ்ரேயாஸ் ஐயர் 2 ரன்களுக்கு தன் விக்கெட்டை பறிகொடுத்தார். அணித்தலைவர் ரிஷப் பந்த் நிதானம் காட்டி 15 ரன்களில் வெளியேறினார்.அடுத்த வந்த ரிபல் படேல் கூட 18 ரன்கள் குவித்தார். இப்படி டெல்லி அணியின் முதல் நான்கு ஜோடிகள் தலா 20 - 27 ரன்கள் குவித்தன. ஹெட்மேயர் மற்றும் அக்ஸர் படேல் ஜோடி 27 பந்துகளுக்கு 36 ரன்களைக் குவித்தது.

ஷர்துல் தாகூர்...

19.4-வது பந்தில் ப்ராவோ வீசிய பந்தை ரபாடா பவுண்டரிக்கு அனுப்பி டெல்லியை வெற்றி பெறச் செய்தார். இந்த போட்டியிலும், வழக்கம் போல முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தும் ஷர்துல் தாகூர் சென்னைக்கு கைகொடுத்தார். ஷர்துல் தாகூர் 4 ஓவர்களில் 13 ரன்களை மட்டும் விட்டுக் கொடுத்து சென்னைக்கு பெரும் அழுத்தம் கொடுத்துக் கொண்டிருந்த ஷிகர் தவான் உட்பட இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஜடேஜா 4 ஓவர்களில் 28 ரன்களைக் கொடுத்து ரிஷப் பந்த் உட்பட 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ப்ராவோ, தீபக் சாஹர், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

கிருஷ்ணப்பா கெளதம்... 

இந்த போட்டியிலேயே அதிக ரன்கள் பறிபோனது, சென்னை வீசிய ஐந்தாவது ஓவரில் தான். அந்த ஒரு ஓவரில் மட்டும் 21 ரன்கள் பறிபோனது. அந்த இடத்திலிருந்து டெல்லி மிக வலுவாக போட்டியில் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது. 17.3-வது ஓவரில் ஹெட்மேயர் அடித்த ஒரு பந்தை கிருஷ்ணப்பா கெளதம் தவறவிட்டது ஒட்டுமொத்த ஆட்டத்தையும் திருப்பிவிட்டது. இந்த இரு தவறுகளை சரி செய்திருந்தால் சென்னை வெற்றி பெற்றிருக்க அதிக வாய்ப்பு இருந்திருக்கும். டெல்லியின் வெற்றியால், கடந்த பல நாட்களாக புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்த சென்னை, தற்போது இரண்டாமிடத்துக்கு வந்திருக்கிறது. டெல்லி 10 போட்டிகளில் வென்று 20 புள்ளிகளோடு முதலிடத்தில் இருக்கிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து