முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

2050-க்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு நீர் கிடைப்பதில் சிக்கல்: ஐக்கிய நாடுகள் சபை எச்சரிக்கை

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

2050-ம் ஆண்டுக்குள் உலகளவில் 500 கோடி மக்களுக்கு தண்ணீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்படும் என்று ஐ.நா. ஆய்வறிக்கை ஒன்றில் எச்சரித்துள்ளது.

உலக வானிலை அமைப்பு (டபிள்யுஎம்ஓ) தண்ணீருக்கான 2021ம் ஆண்டுக்கான காலநிலை சேவைகள் என்ற தலைப்பில் ஆய்வு செய்து அறிக்கை வெளியி்ட்டுள்ளது. அந்த அறிக்கையை உலக வானிலை அமைப்பு பொதுச்செயலாளர் பேராசிரியர் பெட்டெரி தலாக் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

உலகளவில் பருவநிலை மாறுபாடு அதிகரிப்பதால், தண்ணீர் தொடர்பான பேரிடர்களான பெருவெள்ளம், பஞ்சம், ஏராளமான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படுவது போன்ற சிக்கல்கள் வரும் காலத்தில் ஏற்படும். 2018-ம் ஆண்டில் ஆண்டுக்கு 360 கோடி மக்கள் ஆண்டுக்கு ஒரு மாதம் தண்ணீர் பற்றாக்குறையைச் சந்தித்தார்கள். இது 2050-ம் ஆண்டுக்குள் 500 கோடி மக்கள் தண்ணீர் பற்றாக்குறையை, சிக்கலை எதிர்கொள்வார்கள்.

 

ஆதலால், கூட்டுறவு நீர் மேலாண்மை, ஒருங்கிணைந்த நீர் மற்றும் காலநிலை கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் நிலையான வளர்ச்சி, காலநிலை மாற்றக் கொள்கைகளைக் கடைபிடித்தல் மற்றும் பேரிடர் அபாயக் குறைப்பு ஆகியவை உடனடியாகச் செயல்படுத்த வேண்டும், இந்த விலைமதிப்பற்ற பொருளில் முதலீட்டையும் அதிகரிக்க வேண்டும் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து