முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம்: உலக சுகாதார அமைப்பு இந்த வாரம் இறுதி முடிவு

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

கோவேக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்குவது தொடர்பாக உலக சுகாதார அமைப்பு இந்தவாரம் இறுதி  முடிவு எடுக்கவுள்ளது.

அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது. இந்தியாவின் கோவேக்சின் தடுப்பூசிக்கு அவசர கால பயன்பாட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. எனினும், இந்த தடுப்பூசிக்கு  உலக சுகாதார  அமைப்பு இன்னும் அங்கீகாரம் அளிக்கவில்லை.  அவசரகால பயன்பாட்டுக்கு கோவேக்சினை பயன்படுத்த அனுமதி கோரி பாரத் பயோடெக் உலக சுகாதார அமைப்பிடம் விண்ணப்பித்துள்ளது.

 

தடுப்பூசிக்கு அனுமதி அளிப்பதற்காக சோதனை முடிவுகளின் தரவுகளை பாரத் பயோடெக் நிறுவனம் உலக சுகாதார அமைப்பிடம் சமர்பித்துள்ளது. இது குறித்து ஆய்வு செய்து வரும் உலக சுகாதார அமைப்பு இன்னும் தடுப்பூசிக்கு  அங்கீகாரம் அளிக்கவில்லை.  இந்த நிலையில்,  கோவேக்சின் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டுக்கு பயன்படுத்துவது குறித்து இந்த வாரம் இறுதி முடிவு எடுக்கப்படும் என்று உலக சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது. கோவேக்சின் தரமானதா, பாதுகாப்பானதா, பயனுள்ளதா என்பதை நிபுணர் குழு ஆராய்ந்து இறுதி முடிவு எடுக்கும் என்றும் தகவல் தெரிவித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து