முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 போட்டிகளில் 400 சிக்ஸர்: 'ரோகித் சர்மா' புதிய சாதனை

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான போட்டியில், மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா புதிய மைல்கல் சாதனையை படைத்திருக்கிறார்.

புதிய மைல்கல்...

34 வயதாகும் ரோகித் சர்மா, துபாயில் நடைபெற்று வரும் நடப்பு ஐபிஎல் தொடரில், புதிய மைல்கல் சாதனை ஒன்றை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் படைத்திருக்கிறார். ஷார்ஜாவில் நடைபெற்ற 51-வது ஐபிஎல் போட்டியில் விளையாடிய போது, டி20 போட்டிகளில் 400 சிக்ஸர் அடித்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை ரோகித் சர்மா படைத்துள்ளார்.

டோனிக்கு 4-வது...

ரோகித் சர்மாவை தவிர்த்து வேறு எந்த இந்திய வீரரும் 350 சிக்ஸர் என்ற மைல்கல்லை கூட எட்டவில்லை. ரோகித்துக்கு அடுத்ததாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சுரேஷ் ரெய்னா 325 சிக்ஸர்களுடன் 2-வது இடத்தில் இருக்கிறார். ரெய்னாவை அடுத்து பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டன் விராட் கோலி 320 சிக்ஸர்களுடன் 3-ம் இடத்திலும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி 304 சிக்ஸர்களுடன் 4-வது இடத்திலும் உள்ளனர்.

கெய்ல் முதலிடம்...

ரோகித் சர்மா அடித்துள்ள 400 சிக்ஸர்களில் 133 இந்திய அணிக்காகவும், 227 ஐபிஎல் தொடரிலும், 16 சிக்ஸர்கள் சாம்பியன் லீக் தொடரிலும், 24 சிக்ஸர்கள் பிற டி20 போட்டிகளிலும் எடுக்கப்பட்டவை. ரோகித் சர்மா டி20 போட்டிகளில் 400 சிக்ஸர்கள் விளாசியிருக்கும் நேரத்தில் உலக அளவில் டி20 போட்டிகளில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர்கள் வரிசையில், மேற்குஇந்திய தீவுகள் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ் கெய்ல், 1042 சிக்ஸர்களுடன் முதல் இடத்தில் உள்ளார். அதே போல கிறிஸ் கெய்லை தவிர்த்து வேறு எந்த வீரருமே 1000 சிக்ஸர்கள் என்ற மைல்கல்லை எட்டவில்லை.

முதல் 3 இடங்களில்...

 

கிறிஸ் கெய்லுக்கு அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகளின் கேப்டன் கிரன் பொல்லார்ட் 758 சிக்ஸர்களுடன் 2-ம் இடத்திலும், ஆண்ட்ரே ரஸ்ஸல் 510 சிக்ஸர்களுடன் 3-ம் இடத்திலும், நியூசிலாந்தின் பிரெண்டன் மெக்கல்லம் 485 சிக்ஸர்களுடன் 4-ம் இடத்திலும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன் 467 சிக்ஸர்களுடன் 5-ம் இடத்திலும், தென் ஆப்பிரிக்காவின் ஏபி டிவில்லியர்ஸ் 434 சிக்ஸர்களுடன் 6-ம் இடத்திலும் உள்ளனர். இதில் முதல் மூன்று இடங்களில் மேற்கு இந்திய தீவு வீரர்களே உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து