முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கொலை வழக்கு: மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி

புதன்கிழமை, 6 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

கொலை வழக்கு...

டெல்லி சத்ரசல் அரங்கில் நடந்த மோதலில் பலத்த காயமடைந்த சாகர் தங்கர் உயிரிழந்ததையடுத்து இந்த வழக்கை போலீசார் கொலை வழக்காக மாற்றினர். மல்யுத்த வீரர் சுஷில் குமார் 2012-ம் ஆண்டு நடந்த லண்டன் ஒலிம்பிக்கில் வெள்ளிப் பதக்கம் வென்றவர். இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து  முன்னாள் ஜூனியர் தேசிய மல்யுத்த சாம்பியன் சாகர் தங்கர் மற்றும் அவரது நண்பர்களை கடந்த மே மாதம் சொத்து தகராறு காரணமாக சத்ரசல் மைதானத்தில் வைத்து  தாக்கியதாகக் கூறப்படுகிறது.

குற்றச்சாட்டு...

இந்த தாக்குதலில் படுகாயம் அடைந்த சாகர் தங்கர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து சுஷில் குமார் ஜூன் 2-ம் தேதி போலீசாரால் கைது செய்யப்பட்டார். தனது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்கும் நோக்கத்துடன் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதாக கூறி சுஷில் குமார் தரப்பில் டெல்லி ரோகிணி கோர்ட்டில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது .

கோர்ட் தள்ளுபடி...

 

கொலையான சாகர் தங்கர் சார்பில் வழக்கறிஞர் நிதின் வசிஷ் வாதாடினார். சுஷில் குமார் ஜாமீனில் விடுவிக்கப்படக் கூடாது  என வாதாடினார். இந்நிலையில், இந்த ஜாமீன் மனு மீதான விசாரணை நடைபெற்றது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட பிறகு மல்யுத்த வீரர் சுஷில் குமாரின் ஜாமீன் மனுவை டெல்லி ரோகிணி கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து