முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல். கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீச்சாளர்: உம்ரான் மாலிக் சாதனை

வியாழக்கிழமை, 7 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அபுதாபி: ஐ.பி.எல். கிரிக்கெட் 2021 தொடரில் அதிவேக பந்து வீச்சாளர் என்ற சாதனையை உம்ரான் மாலிக் படைத்துள்ளார்.

பெங்களூருக்கு...

ஐ.பி.எல். கிரிக்கெட்டின் 52-வது லீக் ஆட்டம் அபுதாபியில் உள்ள சேக் சாயீத் மைதானத்தில் நடைபெற்றது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி விளையாடியது. இந்த ஐ.பி.எல். தொடரில் அதிவேக பந்து வீசியவராக ஐதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் உம்ரான் மாலிக் சாதனை படைத்துள்ளார்.

153 கி.மீ. வேகம்...

 

போட்டியில் 9வது ஓவரில் தேவ்தத் படிக்கல்லுக்கு அவர் வீசிய 4வது பந்தில் இந்த சாதனையை ஏற்படுத்தி உள்ளார். அவர் மணிக்கு 153 கி.மீ. வேகத்தில் பந்து வீசியுள்ளார்.  இதில், ஒரு ரன் எடுக்கப்பட்டது. கடந்த ஞாயிற்று கிழமை நடந்த போட்டியில் தனது முதல் ஓவரில் மணிக்கு 146 கி.மீ. வேகத்தில் பந்து வீசினார்.  இதனால், இந்த ஐ.பி.எல்.லில் அதிவேக பந்து வீசியவர்களில் டாப் 10ல் இடம் பிடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து