முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிறுபான்மையினரை விரட்டும் போக்கை பாக். நிறுத்த வேண்டும் : ஐ.நா. கூட்டத்தில் இந்தியா லியுறுத்தல்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்களை தங்கள் சொந்த நாட்டை விட்டு விரட்டும் போக்கை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும் என்றும், இந்தியாவின் பெயர் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தனது குற்றங்களை பாகிஸ்தான் நிராகரித்து இந்தியா பற்றி பேசுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம்.

ஐ.நா.பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தின் 6-வது அமர்வு (சட்டம்) ‘சர்வதேச பயங்கரவாதத்தை ஒழித்தல்’ என்ற தலைப்பில் நடை பெற்றது. இந்த கூட்டத்தின் போது பாகிஸ்தான் தூதர் முனீர் அக்ரம் இந்தியாவில் காஷ்மீர் பிரச்சினையை முன்நிறுத்தி ஆதாரமற்ற தகவல்களை தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டை ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர தூதரக ஆலோசகர் காஜல்பட் மறுத்தார். இந்த கூட்டத்தில் காஜல் பட் பேசியதாவது:-

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தனது பொய்களை கட்டவிழ்க்க மீண்டும் ஒருமுறை இந்த அமர்வை பயன்படுத்தி இருக்கிறது. இங்கு முக்கிய குற்றவாளியே பாகிஸ்தான் நாடுதான். பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்கும் அந்த நாடு தன்னை பயங்கரவாதிகளால் பாதிக்கப்பட்ட நாடுபோல காட்டிக்கொள்கிறது.

இந்தியாவின் பெயர் எங்கெல்லாம் பேசப்படுகிறதோ அங்கெல்லாம் தனது குற்றங்களை பாகிஸ்தான் நிராகரித்து இந்தியாபற்றி பேசுவதற்கு கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறோம். பாகிஸ்தானில் சிறுபான்மையினராக உள்ள இந்துக்கள், கிறிஸ்தவர்கள், புத்த மதத்தினர், சீக்கியர்களை தங்கள் சொந்த நாட்டை விட்டு விரட்டும் போக்கை பாகிஸ்தான் அரசு நிறுத்த வேண்டும்.

பயங்கரவாதத்துக்கு பாகிஸ்தான் நிதியுதவி செய்து அவர்களுக்கு ஆதரவு கொடுப்பதை வெளிப்படையாக செய்து வருகிறது. பயங்கரவாதிகள் உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறார்கள். சங்கேத குறியீடுகள், மெய் நிகர் நாணயங்கள், டிரோன்கள் போன்ற புதிய தொழில் நுட்பங்கள் மூலம் பல புதிய இடங்களில் அவர்களின் தீய செயல்கள் அதிகரித்து வருகின்றன.

கொரோனா அச்சுறுத்தல் இந்த நிலைமையை மேலும் மோசமடைய செய்துள்ளது. பொதுமுடக்கம் காரணமாக தனித்திருத்தல், நிச்சயமற்ற பொருளாதாரம் போன்றவை உலகை மேலும் பாதிப்படைய செய்வதோடு பயங்கரவாத செயல்களும் அதிகரித்துள்ளன என்று இந்தியா குற்றம் சாட்டியுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து