முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கக்கூடாது : ஐகோர்ட் நீதிபதிகள் உத்தரவு

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு ஐகோர்ட் அறிவுறுத்தியுள்ளது.

அ.தி.மு.க. கோஷ்டி மோதல் தொடர்பாக சாத்தூர் டவுன் போலீசார் ராஜேந்திரபாலாஜி உள்பட 10 பேர் மீது, கொலை மிரட்டல் மற்றும் கொலைக்கு தூண்டுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரிய ராஜேந்திரபாலாஜியின் மனுவை, திருவில்லிபுத்தூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்நிலையில், இவ்வழக்கில் முன்ஜாமீன் கோரி ராஜேந்திரபாலாஜி மற்றும் 4 பேர்  தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்யப்பட்டுள்ளது. ராஜேந்திர பாலாஜியின் முன்ஜாமீன் மனுவை விசாரித்த நீதிமன்றம், அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கக் கூடாது என காவல்துறைக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், முன்ஜாமீன் மனு குறித்து காவல்துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டு வழக்கை 24-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து