முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஐ.பி.எல் லீக் போட்டிகள் முடிந்தன: ' ப்ளே - ஆஃப் ' சுற்றுக்கு செல்லும் அணிகள் எவை?

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

ஐ.பி.எல் லீக் போட்டிகள் முடிந்த நிலையில் 'ப்ளே - ஆஃப்' சுற்றுக்கு 

செல்லும் 4 அணிகள் எவை? என்பது ஏறக்குறைய முடிவாகியுள்ளது. ஏற்கனவே சென்னை, டெல்லி, பெங்களூரு தகுதிப்பெற்ற நிலையில், 4-வது அணியாக மும்பை அணி அதற்கான வாய்ப்பை ஏறக்குறைய முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான 54-வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி பெற்ற வெற்றி நடப்பு ஐ.பி.எல் தொடரின் ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் 4-வது அணியாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இருக்கும் என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்துள்ளது. லீக் போட்டிகளின் கடைசி நாளான நேற்று அபுதாபியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதின. துபாயில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகள் மோதின.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய அணிகள் ஏற்கனவே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன. டெல்லி அணி புள்ளிப் பட்டியலில் தற்போது முதலிடத்திலும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு மூன்றாவது இடத்திலும் உள்ளன. அனைத்து லீக் போட்டிகளும் முடிந்தபின்பு 4வது இடத்தில் இருக்கும் அணியே ப்ளே-ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறும் கடைசி அணியாக இருக்கும்.

தற்போது நான்காமிடத்தில் 14 புள்ளிகளுடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி இருக்கிறது. ஐந்தாவது இடத்தில் உள்ள பஞ்சாப் கிங்ஸ் மற்றும் ஆறாவது இடத்தில் உள்ள மும்பை இந்தியன்ஸ் ஆகிய இரண்டு அணிகளும் 12 புள்ளிகளை பெற்றுள்ளன. 

 

இனி பஞ்சாப் அணி விளையாட போட்டிகள் ஏதும் இல்லாத நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 86 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை வீழ்த்தியது ப்ளே-ஆஃப் சுற்றுக்கு பஞ்சாப் கிங்ஸ் செல்வதற்கான வாய்ப்பை இல்லாமல் செய்து விட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து