முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் விதைப் பந்துகள் இலவசமாக விநியோகம்

வெள்ளிக்கிழமை, 8 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சென்னை மாநகரில் மக்களின் அதிக நம்பிக்கையையும், மரியாதையையும் பெற்றிருக்கின்ற ரியல் எஸ்டேட் டெவலப்பர் நிறுவனமான நவீன்ஸ், ஒருவார காலம் நடைபெறுகின்ற ‘சீட்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற பசுமை செயல்திட்டத்தை  தொடங்கியிருக்கிறது.

மரங்களை நடுவதற்கு தேவையான விதைப்பந்துகளை இலவசமாக வினியோகிப்பதற்காக ஒரு பிரத்யேக வாகனம், நகரின் பல்வேறு பகுதிகளில் பயணிக்கும். நவீன்ஸ் – ன் இந்த புதுமையான கருத்தாக்கம் சென்னை வாழ் மக்கள் மத்தியில் மரங்களை நட்டு, பசுமைப்பரப்பை அதிகமாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வையும், ஆர்வத்தையும் உயர்த்தும் நவீன்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதிகளால் வினியோகிக்கப்படுகின்ற இந்த விதைப்பந்துகள் வினியோக திட்டம் 2021 அக்டோபர் 8 முதல் ஆரம்பமாகிறது.

நவீன்ஸ் – ன் நிறுவனரும், தலைமைச் செயல் அலுவலருமான டாக்டர். குமார், இந்த பசுமை செயல்முயற்சி குறித்துப் பேசுகையில் ஐ.ஜி.பி.சி. – ன் பசுமை சேம்பியன் விருதை தேசிய அளவில் வென்ற சாதனை எங்களுக்கு இருக்கிறது.  இயற்கையின் மீது பேரார்வம் கொண்டிருக்கும் நவீன்ஸ், மரங்களை நட்டு இயற்கைக்கு நெருக்கமாக தங்கள் வாழ்விடங்களை அமைத்துக்கொள்ளவும் சுற்றுச்சூழலுக்கு உதவவும் இத்திட்டத்தின் மூலம் ஊக்குவிக்கிறது. 

இந்த சிறந்த நோக்கத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் இத்தகையதொரு தனித்துவமான முயற்சியாக விதைப்பந்துகளை நகரின் பல பகுதிகளில் வினியோகிக்கும் இத்திட்டத்தை சென்னையில் அறிமுகம் செய்யும் முதல் நிறுவனமாக இருப்பது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. 

நவீன்ஸ்–ன் ஹேங்கிங் கார்டன்ஸ் திட்டம் குறித்து சொல்வதென்றால், முழுமையான சூழலமைப்பை தனக்குள் கொண்டிருக்கின்ற தனிச்சிறப்பான அமைவிடமாக இது இருக்கும். இயற்கையின் மடியில் அதன் இனிமையை நுகர்வோர்கள் உணருமாறு செய்வதாக இது அமையும்.  இதன் மூலம் சென்னையின் அடுத்த புதிய அதிசயமாக இது மக்களின் பெரும் வரவேற்பை பெறும் என்பது நிச்சயம் என்று கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து