முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெருநிறுவனங்களுக்கு 15 சதவீத வரி: ஒப்பந்தத்தில் 136 நாடுகள் கையெழுத்து

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : பெருநிறுவனங்கள் நியாயமான விகிதத்தில் வரிசெலுத்துவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒப்பந்தத்தில் பெரும்பாலான உலக நாடுகள் கையெழுத்திட்டுள்ளன.

பெருநிறுவனங்கள் தாங்கள் ஈட்டும் வருவாயில் 15 சதவிகிதத்தை கார்ப்பரேட் வரியாக செலுத்த வைப்பதற்கான ஒப்பந்தத்தில் 136 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு எனும் பன்னாட்டு அமைப்பு பெருநிறுவனங்களுக்கு குறைந்தபட்ச கார்ப்பரேட் வரியை விதிப்பதற்கான பேச்சுவார்த்தைகளை சுமார் பத்தாண்டு காலமாக முன்னின்று நடத்தி வந்தது.

இந்த வரி விகிதத்தால் ஆண்டுதோறும் சுமார் 150 பில்லியன் அமெரிக்க டாலர் (சுமார் 11 லட்சத்து 30 ஆயிரம் கோடி இந்திய ரூபாய்) கூடுதல் வருவாய் உலக நாடுகளின் அரசுகளுக்கு கிடைக்கும் என்று அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. எனினும் 15 சதவிகித கார்ப்பரேட் வரி என்பது மிகவும் குறைவானது என்றும் கார்ப்பரேட் நிறுவனங்கள் ஏதாவது சட்டவிதிகளை பின்பற்றி வரி செலுத்தாமல் இருந்து விடுவார்கள் என்றும் அதன் விமர்சகர்கள் கூறுகிறார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து