முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வீட்டின் அருகிலேயே தடுப்பூசி முகாம்கள் : பயன்படுத்தி கொள்ள அமைச்சர் வேண்டுகோள்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்றோர் 2 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை மாநகராட்சி., தேனாம்பேட்டை மண்டலம், மெரினா கடற்கரை பகுதியில் இரவு நேரங்களில் தங்கும் நரிகுறவ சமூக மக்களுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் சிறப்பு முகாமினை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். முகாமில் தடுப்பூசி செலுத்திக் கொண்ட நரிகுறவ சமூக மக்களுக்கு பழங்கள் மற்றும் பிரட் அடங்கிய கூடைகளை அவர் வழங்கினார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது.,

தமிழ்நாட்டில் தடுப்பூசி போடும் பணிகள் அனைத்து நிலைகளிலும் வேகமாக நடைபெற்று வருகிறது. நேற்று இரவு வரை மொத்தம் 5 கோடியே 2 லட்சத்து 54 ஆயிரத்து 633 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். முதல் தவணை தடுப்பூசியை 65 சதவீதம் பேரும், இரண்டாவது தவணையை 22 சதவீதம் பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

சென்னை மாநகராட்சியில் இதுவரை 68 லட்சத்து 56 ஆயிரத்து 278 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. 83 சதவீதம் பேர் முதல் தவணையும், 40 சதவீதம்பேர் இரண்டாம் தவணையும் செலுத்தி உள்ளனர். தடுப்பூசி செலுத்திக் கொண்டதில் சென்னை மாநகராட்சி தமிழ்நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது. 

சாலைகளில் வசிக்கும் ஆதரவற்ற மற்றும் வீடற்றோர் 2 ஆயிரத்து 245 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மனநலம் பாதிக்கப்பட்ட 1,761 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி செலுத்துவதன் சிறப்பு நடவடிக்கையாக இன்று 5-வது மெகா தடுப்பூசி முகாம் நடைபெறுகிறது. கோவிட் தடுப்பூசி செலுத்துவதன் அவசியம் குறித்து பல்வேறு வகைகளில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை இல்லாத வகையில் அதிகம் பேர் பயன்பெறும் முகாமாக நாளை நடைபெறும் முகாம் இருக்கும். மக்கள் அவர்களது வீட்டின் அருகிலேயே நடக்கும் முகாம்களில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும்.

தமிழ்நாட்டில் மொத்தமாக தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்கள் எண்ணிக்கையை 70 சதவீதமாக விரைவில் உயர்த்தும் வகையில் பணிகள் நடைபெற்று வருகின்றன என தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் மருத்துவம் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட அலுவலர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து