முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

வெற்றிப் பெற்றும் பலனில்லை: மும்பையின் ப்ளே-ஆஃப் சுற்று கனவை கலைத்த ' ஐதராபாத் '

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

மும்பை அணியின் ப்ளே-ஆஃப் சுற்றுக்கான கனவை கலைத்த ' ஐதராபாத் ' அணியும், மும்பை அணியும் லீக் போட்டியோடு வெளியேறின.

மாயஜாலங்கள்...

பெங்களூரு - டெல்லி அணிகளுக்கு இடையேயான போட்டி நடந்த அதே நேரத்தில் நடத்தப்பட்ட மும்பை இந்தியன்ஸ் - ஐதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியும் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வாய்ப்பில்லாத போட்டியாகவே கவனிக்கப்பட்டது. ஆனால் அங்கும் இருபது ஓவர் கிரிக்கெட்டின் மாயஜாலங்களைக் காண முடிந்தது. 171 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றால் பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெற முடியும் என்ற நிலையில், அசாத்தியமான இந்த இலக்கை பாதி அளவுக்குக் கடந்தது மும்பை இந்தியன்ஸ் அணி.

வேகமான... 

அந்த அணியின் தொடக்க வீரர் இஷான் கிஷன் தான் சந்தித்த பந்துகளையெல்லாம் எல்லையை நோக்கி விரட்டிக் கொண்டிருந்தார். முதல் 5 ஓவர்கள் முடிந்திருந்த போது மும்பை இந்தியன்ஸ் அணி 78 ரன்களைக் குவித்திருந்தது. இஷான் கிஷன் பதினாறே பந்துகளில் அரைச் சதம் அடித்தார். ஐபிஎல் போட்டிகளில் மிக வேகமான அரைச் சதம் இது.

235 ரன்கள்...

10 ஓவர்களில் 131 ரன்களை எடுத்த மும்பை அணியை இரண்டாவது பாதியில் சூர்ய குமார் யாதவ் முன்னோக்கிக் கொண்டு சென்றார். அந்த அணி இருபது ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 235 ரன்களைக் குவித்தது. இஷான் கிஷன் 32 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தார். சூர்ய குமார் யாதவ் 40 பந்துகளில் 82 ரன்களை எடுத்தார். 

65 ரன்களுக்குள்... 

ஐதராபாத் அணியை 65 ரன்களுக்குள் சுருட்டினால், பிளே ஆப் சுற்றுக்குத் தகுதி பெறலாம் என்ற இலக்குடன் பந்து வீசிய மும்பை அணியின் கனவை, ஐதராபாத் அணியின் தொடக்க வீரர்கள் கலைத்துவிட்டனர். அந்த அணி 8 விக்கெட் இழப்புக்கு 182 ரன்களைக் குவித்தது. இரு அணிகளும் இந்த ஆண்டின் ஐ.பி.எல் போட்டிகளில் இருந்து வெளியேறிவிட்டன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து