முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அற்புதமான நினைவுகள்: ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த வார்னர்

சனிக்கிழமை, 9 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

அற்புதமான நினைவுகளை உருவாக்கி தந்ததாக ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் ஐதராபாத் வீரர் டேவிட் வார்னர்.

ஐதராபாத் தோல்வி...

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டார். ஐபிஎல் கிரிக்கெட் தொடரில்அபுதாபியில் நடைபெறற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும் மோதின.  இந்த போட்டியில் மும்பை அணியிடம் 42 ரன்கள் வித்தியாசத்தில்  தோல்வியை தழுவியது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி.இந்த போட்டி இந்த சீசனில் ஐதராபாத் அணியின்  கடைசி போட்டி ஆகும்.

சிறந்த பயணம்...

 

இது குறித்து சன்ரைசர்ஸ்  ஐதராபாத் அணியின் முன்னாள் கேப்டன் டேவிட் வார்னர் இன்ஸ்டாகிராமில்  பதிவு  ஒன்றை வெளியிட்டார். அந்த பதிவில் அவர் கூறியதாவது., அற்புதமான நினைவுகளை உருவாக்கிய ரசிகர்களாகிய  உங்களுக்கு எனது நன்றிகள். நீங்கள் அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை. இது ஒரு சிறந்த பயணம் என்று பதிவிட்டுள்ளார்.செப்டம்பர் 25 அன்று  ஐதராபாத் அணிக்காக  விளையாடிய டேவிட் வார்னர் . அதன் பிறகு நடைபெற்ற  போட்டிகளில்  பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து