முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

உலகம் முழுவதும் கொரோனாவால் பலியானவர்கள் எண்ணிக்கை 48 லட்சமாக உயர்வு

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

உலகம் முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 23.86 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 48 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கொரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. எனினும், உலகம் முழுவதும் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 23,86,69,219-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 48,67,616 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 21,58,64,543 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 1,79,37,060 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 82,452 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான நாடாக அமெரிக்‍கா உள்ளது. அங்கு இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 4,52,04,373-ஆகவும் பலி எண்ணிக்‍கை 7,33,575 ஆகவும் உயர்ந்துள்ளது. 

 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,39,71,607 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,50,814 பேர் பலியாகியுள்ளனர். தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,15,75,820 ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,01,047 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து