முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மீண்டும் இணைக்கும் சீனாவின் நடவடிக்கையை ஏற்க முடியாது: தைவான் அதிபர் திட்டவட்டம்

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் இருந்தாலும் அந்நாட்டுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சீனா இடையே உள்ள ‘ ஒருநாடு இரு அமைப்புகள்’ கொள்கைப்படி தைவானை தங்களுடன் இணைக்க சீனா விரும்புகிறது. அமைதி வழியில் சீனாவுடன் தைவான் இணைக்கப்படும் என்று சீன அதிபர் ஷி ஜின் பிங் கூறியிருந்தார். சீனாவின் இத்தகைய அழுத்தத்திற்கு மண்டியிட மாட்டோம் என்று தைவான் அதிபர் சாய் இங்-வென் கூறியுள்ளார்.

சீனாவில் கடந்த 1949-ல் நடந்த உள்நாட்டுப் போருக்கு பின் தைவான் தனி நாடாக உருவானது. எனினும் தங்களது ஆட்சி அதிகாரத்துக்கு உட்பட்ட பகுதியாகவே தைவானை சினா கூறி வருகிறது. இதனை தைவான் ஏற்க மறுத்து வருகிறது. இந்நிலையில்,  சீனப் புரட்சியின் 110-ஆவது ஆண்டு தினத்தையொட்டி, தலைநகா் பெய்ஜிங்கில் ஷி ஜின்பிங் ( Xi Jinping) உரையாற்றினார்.

அப்போது, “அமைதியான முறையில் தைவான் சீனாவுடன் இணைக்கப்படும். தற்போது தைவானை சீனாவுடன் இணைப்பதற்கு தைவான் விடுதலைப் படைதான் மிகப் பெரிய தடைக்கல்லாக உள்ளன. தாய்நாட்டை முழுமையாக ஒன்றிணைக்கும் வரலாற்று பணி நிறைவேற்றப்பட வேண்டும், நிச்சயமாக நிறைவேற்றப்படும்” என்று தெரிவித்தார்.

சீனாவின் ஒரு அங்கமாக ஹாங்காங் இருந்தாலும் அந்நாட்டுக்கு தன்னாட்சி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. ஹாங்காங் சீனா இடையே உள்ள ‘ ஒருநாடு இரு அமைப்புகள்’ கொள்ளைப்படி தைவானை தங்களுடன் இணைக்க சீனா விரும்புகிறது. ஆனால் சீனாவின் முடிவை ஏற்க முடியாது என்று தைவான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

 

தைவானின் தேசிய தினத்தையொட்டி நாட்டு மக்களிடம் உரையாற்றிய அதிபர் சாய் இங்-வென், " நாம் எந்த அளவுக்கு சாதிக்கிறோமோ அந்த அளவுக்கு சீனாவிடம் இருந்து அழுத்தத்தை எதிர்கொள்வோம்.  தைவான் ஆவேசமாக செயல்படாது. ஆனால் , சீனா தங்கள் மீது அமைத்துள்ள பாதையில் தைவானை பயணிக்கும்படி யாரும் கட்டாயப்படுத்த முடியாதப்படி பாதுகாப்பை பலப்படுத்துவோம் ” என்று தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து