முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலகக் கோப்பை போட்டியில் 'இரண்டரை நிமிட இடைவேளை' ஐ.சி.சி. அறிவிப்பு

திங்கட்கிழமை, 11 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

டி-20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி-20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி-20 உலகக் கோப்பை போட்டி, கொரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை ஆகஸ்ட் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

புதிதாக அறிமுகம்...

 

இந்நிலையில் ஐ.பி.எல் போல டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலும் இடைவேளையை அறிமுகம் செய்யவுள்ளது ஐசிசி. ஐ.பி.எல் போட்டியில் 20 ஓவர்களில் 2 முறை இடைவேளை விடப்படுகிறது. முதல் 6 முதல் 9 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை ஃபீல்டிங் செய்யும் அணியும் 13 முதல் 16 ஓவர்கள் வரை ஒரு இடைவேளையை பேட்டிங் செய்யும் அணியும் தேர்வு செய்யலாம். அதேபோல டி-20 உலகக் கோப்பைப் போட்டியிலும் ஒவ்வொரு இன்னிங்ஸிலும் 10-வது ஓவரின் முடிவில் வீரர்களுக்கு இரண்டரை நிமிட இடைவேளை வழங்கப்படும் என ஐசிசி அறிவித்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வானிலை காரணமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து