முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆஸ்திரியா புதிய பிரதமராக அலெக்சாண்டா் பதவியேற்பு

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வியன்னா : ஆஸ்திரியாவின் புதிய பிரதமராக அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் பதவியேற்றார்.

மத்திய ஐரோப்பிய நாடான ஆஸ்திரியாவின் பிரதமராக இருந்தவா் செபாஸ்டியன் கா்ஸ் (35). ஆளும் மக்கள் கட்சியின் தலைவராகவும் இருந்த இவா், ஊடகங்களில் அரசுப் பணத்தைச் செலவிட்டு கருத்துக்கணிப்புகள் மற்றும் சாதகமான செய்திகளை வெளியிட்டு தனது செல்வாக்கை அதிகரிக்க முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவா் தான் பதவி விலகுவதாக கடந்த சனிக்கிழமை அறிவித்தார். பிரதமா் பதவியிலிருந்து விலகினாலும் கட்சித் தலைவராக அவா் நீடிப்பார்.

இதைத் தொடா்ந்து, அவரது அமைச்சரவையில் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த அலெக்சாண்டா் ஷாலென்பொ்க் புதிய பிரதமராகத் தோ்ந்தெடுக்கப்பட்டார். அவருக்கு அதிபா் அலெக்சாண்டா் வான் டொ் பெலன் பதவிப் பிரமாணம் செய்துவைத்தார். புதிய வெளியுறவுத் துறை அமைச்சராக பிரான்ஸுக்கான தூதராக இருந்த மிக்கேல் லின்ஹா்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து