முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கோபமடைந்த விராட் கோலி: விளக்கம் அளித்த நடுவர் மீது கவாஸ்கர் அதிருப்தி

செவ்வாய்க்கிழமை, 12 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

கொல்கத்தா அணிக்கு எதிரான ஐ.பி.எல் ஆட்டத்தில் தவறாக தீர்ப்பு வழங்கிய நடுவர் மீது தனது கோபத்தை வெளிப்படுத்தினார் ஆர்.சி.பி அணி கேப்டன் விராட் கோலி.

கொல்கத்தா வெற்றி...

ஷார்ஜாவில் நடைபெற்ற கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் விளையாடிய ஆர்சிபி அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்தது. கோலி 39 ரன்கள் எடுத்தார். நரைன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். பிறகு பேட்டிங் செய்த கொல்கத்தா அணி, 19.4 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. கில் 29, நரைன் 26, வெங்கடேஷ் ஐயர் 26 ரன்கள் எடுத்தார்கள். சிராஜ், ஹர்ஷல் படேல், சஹால் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள்.

டி.ஆர்.எஸ் முறை...

கொல்கத்தா இன்னிங்ஸில் 7-வது ஓவரின் கடைசிப் பந்தில் சஹால் பந்தில் ராகுல் திரிபாதி எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இதற்கு கள நடுவர் விரேந்தர் சர்மா முதலில் அவுட் கொடுக்கவில்லை. பிறகு டிஆர்எஸ் முறையைப் பயன்படுத்தினார் கோலி. அதில் திரிபாதி அவுட் என தீர்ப்பளிக்கப்பட்டது. இதனால் கோபமடைந்த விராட் கோலி, கள நடுவர் விரேந்தர் சர்மாவிடம் கோபமாகப் பேசினார். பந்தைத் தூக்கி கீழே எறிந்தார். 

கவாஸ்கர் அதிருப்தி...

 

ஒரு ஓவர் கழித்து, இடைவேளையில் விரேந்தர் சர்மா, விராட் கோலியிடம் தன்னிலை விளக்கம் அளித்தார். இதைக் கண்ட வர்ணனையாளர் கவாஸ்கர், நடுவர் மீது அதிருப்தியை வெளிப்படுத்தினார். நடுவர் விளக்கம் அளிக்கத் தேவையில்லை. அவர் ஒரு முடிவு எடுத்தார். அது சரியா தவறோ அது அவருடைய முடிவு என்று தொலைக்காட்சி வர்ணனையில் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து