முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாட்டு வங்கிகளில் அதிக கடன் வாங்கிய நாடுகள்: உலக வங்கி தகவல்

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஜெனீவா : வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய 10 நாடுகளின் பட்டியலை உலக வங்கி வெளியிட்டுள்ளது. அதில், பாகிஸ்தான் இடம்பெற்றுள்ள நிலையில், கடனை தற்காலிகமாக ரத்து செய்யும் நடைமுறைக்கு அது தகுதி பெற்றுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.

கொரோனா காரணமாக ஏழை மற்றும் நடுத்தர வருமான நாடுகளுக்கு உதவும் வகையில் அவர்களுக்கு வழங்கப்பட்ட கடன் குறிப்பிட்ட காலம் வரை ரத்து செய்யப்பட்டுவருகிறது. இந்த தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தான் பாகிஸ்தான் தற்போது தகுதி பெற்றுள்ளது. 2022 ஆண்டுக்கான சர்வதேச கடன் புள்ளியியலை உலக வங்கி திங்கள்கிழமை வெளியிட்டுள்ளது. அதன்படி, வெளிநாட்டு வங்கிகளில் இந்த கடன் ரத்து நடைமுறைக்கு தகுதிபெற்ற நாடுகள் வாங்கிய கடன் விகிதங்களில் பெரிய வேறுபாடு இருப்பது தெரியவந்துள்ளது. 

வெளிநாட்டு வங்கிகளில் அதிகம் கடன் வாங்கிய நாடுகளின் பட்டியலில் அங்கோலா, வங்கதேசம், எத்தியோப்பியா, கானா, கென்யா, மங்கோலியா, நைஜீரியா, பாகிஸ்தான், உஸ்பெகிஸ்தான், சாம்பியா ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளன. இந்த நாடுகள் அனைத்தும் தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தகுதி பெற்றுள்ளன. 2020ஆம் ஆண்டின் இறுதி வரை, தற்காலிக கடன் ரத்து நடைமுறைக்கு தகுதிபெற்ற நாடுகள் வாங்கிய மொத்த கடன் இருப்பு 509 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும். 2019 ஆண்டை ஒப்பிடுகையில், இது 12 சதிவிகிதம் அதிகமாகும். 

கடன் ரத்து நடைமுறைக்கு தகுதி பெற்ற மொத்த நாடுகள் வாங்கிய கடனில் 59 சதவிகிதம் கடனை இந்த முதல் 10 நாடுகளே நாடுகள் பெற்றுள்ளன. அதேபோல், உத்தரவாதம் இல்லாமல் கடன் அளிக்கப்பட்ட நாடுகளின் 65 சதிவிகிதம் கடனை இந்த 10 நாடுகளே பெற்றுள்ளன. ஆனால், நாடுகள் வாங்கிய கடனின் விகிதம் ஒன்றுக்கு ஒன்று பெரிய அளவில் மாறுபடுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து