முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி20 உலக கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்கான புதிய ஜெர்சி அறிமுகம்

புதன்கிழமை, 13 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது.

அக். 17-ம் தேதி...

டி20 உலகக்கோப்பை தொடர்  ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17-ம் தேதி முதல் நடைபெறவுள்ளது. உலகக் கோப்பை தொடரின் போது இந்திய அணிக்கு புது ஜெர்சி வழங்குவது வழக்கமாக இருக்கிறது. இந்நிலையில் இந்தாண்டுக்கான டி20 உலகக் கோப்பைக்கான புதிய ஜெர்சியை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. 

புதிய ஜெர்சி...

விராட் கோலி, ரோகித் சர்மா, கேஎல் ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் இந்த ஜெர்சியை அறிமுகப்படுத்தினர். 1992-ம் ஆண்டு இந்திய அணி அணிந்திருந்த ஜெர்சியை போன்று கடந்த டி20 உலக கோப்பை போட்டியில் இந்திய வீரர்கள் அணிந்திருந்த நிலையில் அதனை தற்போது மாற்றியுள்ளது. இந்த புதிய ஜெர்சியை பிசிசிஐ தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 

முதல் போட்டியில்...

 

உலகக்கோப்பை தொடர் அக்டோபர் 17-ந்தேதி தொடங்கி நவம்பர் 14-ந்தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்தியா வருகிற 24-ந்தேதி முதல் ஆட்டமாக பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. அக்டோபர் 18-ந்தேதி பயிற்சி ஆட்டத்தில் இங்கிலாந்தை எதிர்த்து விளையாடுகிறது. இந்த போட்டியின்போது இந்திய வீரர்கள் புது சீருடையை அணிந்து விளையாடுவார்கள்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து