முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மசூதி தாக்குதலுக்கு ஐ.எஸ். பொறுப்பேற்பு

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

ஆப்கன் ஷியா மசூதி தாக்குதலுக்கு பொறுப்பேற்றிருப்பதாக, செய்தியறிக்கை வெளியிட்டுள்ளது ஐ எஸ் அமைப்பு. ஆப்கானிஸ்தான் காந்தஹார் நகரில் வெள்ளிக்கிழமை ஷியா இஸ்லாமிய பிரிவினர் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது பீபி ஃபாத்திமா மசூதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதலில் குறைந்தது 40 பேர் கொல்லப்பட்டனர்.

இத்தாக்குதலுக்குப் பின் தாங்கள் இருப்பதாக இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் ஐ எஸ் அமைப்பு கூறியுள்ளது.ஆப்கானிஸ்தானில் இதற்கு முந்திய வெள்ளிக்கிழமை குண்டூஸ் மாகாணத்தில் ஒரு ஷியா மசூதியில் தற்கொலை குண்டு தாக்குதல் நடந்ததில் ஐம்பது பேர் கொல்லப்பட்டனர்.

______________

சீனாவில் குரான் செயலியை நீக்கிய ஆப்பிள் நிறுவனம்

உலகின் மிகப் பிரபலமான குரான் செயலிகளில் ஒன்றான 'குரான் மஜீத் என்கிற தன் செயலியை சீனாவில் உள்ள பயர்னர்களுக்கான ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கியுள்ளது ஆப்பிள். செயலியை சீனாவில் சுமார் 10 லட்சம் பயனர்கள் பயன்படுத்தியதாக அச்செயலியை உருவாக்கிய பி டி எம் எஸ் நிறுவனம் கூறியுள்ளது.சட்டவிரோதமான மதம் சார்ந்த எழுத்துகள் இடம் பெற்றிருந்ததால் இந்த செயலி நீக்கப்பட்டதாக தெரியவருகிறது.

ஆப்பிள் நிறுவனமும் இப்பிரச்சனை தொடர்பாக எந்த வித நேரடி பதிலையும் கொடுக்காமல், தன் மனித உரிமை கொள்கைகள் பக்கத்தைச் சுட்டிக் காட்டுகிறது. அதில், ஆப்பிள் நிறுவனம் அந்தந்த நாட்டு சட்டங்களுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். ஆனால், சில நேரங்களில் சில சிக்கலான விஷயங்களில் அரசுகளின் கருத்தில் தங்களுக்கு மாறுபாடு இருக்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

______________

இந்திய வம்சாவளியை சேர்ந்தவருக்கு பதவி

அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரவி சவுத்ரியை நியமிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தேர்வு செய்துள்ளார். இவர் இதற்கு முன்பாக அமெரிக்க போக்குவரத்து துறையில் முக்கிய பதவியில் இருந்துள்ளார்.

1993 முதல் 2015 வரையில் அமெரிக்க விமானப்படையில் அதிகாரியாக பணியாற்றி உள்ளார். சி-17 ரக போர் விமானத்தில் விமானியாக உலகின் பல நாடுகளுக்கும் சென்று வந்து உள்ளார். அமெரிக்க ராணுவ தலைமையகத்தில் எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழலுக்கான விமானப்படையின் உதவி செயலாளர் பதவியில் இவர் அமர்த்தப்படுவதற்கு அந்த நாட்டின் நாடாளுமன்ற செனட் சபை தனது ஒப்புதலை அளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

______________

சிரியா பெண்ணுக்கு சிறந்த மேயர் விருது 

2021ஆம் ஆண்டின் சர்வதேச உலக மேயர் பரிசு மற்றும் விருது பட்டியலில், லைலா முஸ்தஃபாவின் மட்டுமே தேர்வானது. இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழுவின் வீழ்ச்சிக்குப் பிறகு, தமது சொந்த நகரமான ரக்காவை மீண்டும் கட்டியமைத்ததற்காக இவர் கெளரவிக்கப்பட்டிருக்கிறார். சிரியாவில் "ரக்கா விடுதலை" ஆகி நான்கு வருடங்கள் ஆகிவிட்டன, இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொள்ளும் குழுவின் கோட்டை மற்றும் தலைநகரமாக அப்பகுதி அறியப்பட்டது. அந்த இடத்தில் ஐ.எஸ் இப்போது கிடையாது.

லைலா முஸ்தஃபா என்ற இந்தப் பெண், தனது சொந்த நகரான ரக்காவை மீண்டும் கட்டியெழுப்பவும், அங்குள்ள பெண்களுக்கு உதவவும் தீவிரமாக முயற்சித்து வருகிறார். அதற்கான கெளரவமாக அவர் உலகின் சிறந்த மேயர் விருதுக்கு தேர்வாகியிருக்கிறார்.

______________

பாகிஸ்தானைவிட பின்தங்கிய இந்தியா

உலக நாடுகளில் எந்த அளவுக்கு 'பட்டினி' இருக்கிறது என்பதை மதிப்பிட்டு அதன் அடிப்படையில் நாடுகளை தரவரிசைப்படுத்தும் ஒரு பட்டியலில் இந்தியாவின் தர நிலை பாகிஸ்தான், பல ஏழை ஆப்பிரிக்க நாடுகளைவிடவும் மோசமான இடத்தில் உள்ளது. கடந்த வியாழக்கிழமை வெளியான நடப்பு 2021ம் ஆண்டுக்கான இந்தப் பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 116 நாடுகளில் இந்தியா 101வது தரவரிசையில் உள்ளது. 

இதன் பொருள் இந்த 116 நாடுகளில் 15 நாடுகள் மட்டுமே இந்தியாவை விட மோசமான நிலையில் உள்ளன என்பதாகும். இந்தப் பட்டியல் அறிவியல் பூர்வமாகவோ கள எதார்த்தத்தை கணக்கில் எடுத்துக்கொண்டோ தயாரிக்கப்படவில்லை என்று இந்தியா கூறியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான பட்டினிப் பட்டியலில் இடம் பெற்ற 107 நாடுகளில் இந்தியா 94வது தர நிலையில் இருந்தது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து