முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆப்கான் ட்ரோன் தாக்குதல்: 10 பேர் கொல்லப்பட்டதை ஒப்புக்கொண்ட அமெரிக்கா

சனிக்கிழமை, 16 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க ராணுவம் முழுமையாக வெளியேறுவதற்கு சில தினங்களுக்கு முன் நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் 10 அப்பாவி பொதுமக்கள் கொல்லப்பட்டது உண்மைதான் என அமெரிக்கா ஒப்புக் கொண்டுள்ளது.

ஆகஸ்ட் 29ஆம் தேதி நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் ஒரு மனிதாபிமான சேவை உதவியாளர் மற்றும் அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் இறந்துள்ளதாக அமெரிக்காவின் மத்திய கமாண்ட் விசாரணை கண்டுபிடித்துள்ளது. தாக்குதலில் பலியானவர்களில் ஏழு பேர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது. பலியானவர்களில் இரண்டு வயதான குழந்தை சுமையா தான் மிகவும் இளையவர்.

ஆப்கானிஸ்தானில் உள்ள காபூல் விமான நிலையத்தில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதலைத் தொடர்ந்து, அமெரிக்காவின் இந்த ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டது. திடீரென தாலிபன்கள் ஆட்சியைக் கைப்பற்றியதால், அப்போது மக்களை மீட்கும் பணிகளும் அதிதீவிரமாக நடந்து கொண்டிருந்தது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நடத்திய 20 ஆண்டு கால ராணுவ செயல்பாடுகளில், கடைசி நடவடிக்கை அது.

அமெரிக்க உளவுத் துறை, அந்த மனிதாபிமான சேவை உதவியாளரின் காரை எட்டு மணி நேரத்துக்கு மேல் பின் தொடர்ந்ததாகவும், அந்த காருக்கும் இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் கடும்போக்குவாதிகளுக்கும் தொடர்பு இருப்பதாகவும் அமெரிக்க மத்திய கமாண்டின் ஜெனரல் கென்னெத் மெக்கென்ஸி கூறினார். அந்த கார், இஸ்லாமிக் ஸ்டேட் - கோரோசான் கடும்போக்குவாத அமைப்புகளோடு தொடர்புடைய வளாகம் ஒன்றில் காணப்பட்டதாக விசாரணையில் தெரிய வந்தது. மேலும் அக்காரின் நகர்வுகள் அக்கடும்போக்கு அமைப்பு காபூல் விமான நிலையத்தின் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தும் திட்டம் தொடர்பான உளவுத் துறை செய்திகளோடு ஒத்துப்போயின.

அக்காரில் வெடிபொருட்களை நிரப்புவது போன்ற காட்சிகள் ஒரு கண்காணிப்பு ட்ரோன் மூலம் கிடைத்தது, ஆனால் உண்மையில் தண்ணீர் பாட்டில்களே நிரப்பப்பட்டன. ஜெனரல் மெகென்ஸி அந்த ட்ரோன் தாக்குதலை ஒரு "சோகமான தவறு" என குறிப்பிட்டுள்ளார். மேலும் இந்த தாக்குதல் தொடர்பான உளவுத் துறை விவகாரங்களில் தாலிபன்கள் ஈடுபடுத்தப்படவில்லை எனவும் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago
View all comments

வாசகர் கருத்து