முக்கிய செய்திகள்

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே. அணிக்கான முதல் வீரராக டோனி தக்க வைப்பு

Doni 2021 10 17

Source: provided

புதுடெல்லி : அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் சி.எஸ்.கே.அணிக்காக டோனி முதல் வீரராக தக்கவைக்கப்பட்டுள்ளதாக அணி நிர்வாகம் அறிவித்துள்ளது. 

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டியில் புதியதாக 2 அணிகள் பங்கேற்கின்றன. இதனால் மிகப்பெரிய அளவில் ஏலம் நடைபெற உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு ஐ.பி.எல்.போட்டிகளில் விளையாடுவீர்களா என டோனியிடம் கேட்டபோது அவர், பி.சி.சி.ஐ. மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் எடுக்கும் முடிவை பொறுத்து என்னுடைய ஐ.பி.எல்.எதிர்காலம் அமையும் என்று தெரிவித்தார்.

இந்த நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐ.பி.எல். போட்டிக்கான ஏலத்திற்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முதல் வீரராக டோனி தக்க வைக்கப்பட்டுள்ளார். இதை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நிர்வாகம் நேற்று அறிவித்ததுள்ளது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இந்த அறிவிப்பின் மூலம் டோனி அடுத்த ஆண்டுநடைபெற இருக்கும் ஐ.பி.எல். போட்டியில் சென்னை அணிக்காக தொடர்ந்து விளையாடுவார் என தெரியவந்துள்ளது. டோனி சமீபத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 4-வது ஐ.பி.எல். கோப்பையை பெற்றுக்கொடுத்தது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து