முக்கிய செய்திகள்

உடன்பிறப்பே - விமர்சனம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      சினிமா
Jyotika 2021 10 17

Source: provided

பாசக்கயிறால் அண்ணனையும் கணவரையும் கட்டிப்போடும் அழகிய கிராமத்துப் பெண் ஜோதிகா. ஊரில் நடக்கும் தவறுகளைத் தட்டிக் கேட்கும் கரடு முரடான அண்ணன் சசிக்குமார்.

எல்லாத் தவறுகளையும் சட்டப்படித் தான் தீர்க்க வேண்டும் என நினைக்கும் கணவர் சமுத்திரக்கனி. கருத்துக்களில் இருவருக்கும் வேறுபாடு இருப்பதால் இருவரும் பிரிந்து நிற்கிறார்கள் இந்த இரு துருவங்களை இணைக்கத் தங்கை ஜோதிகா நடத்தும் பாசப் போராட்டம்தான் இந்த உடன்பிறப்பே படம்.

இந்த படத்தை பார்க்கும் போது பாசமலர்,  கிழக்குச் சீமையிலே,  கடைக்குட்டி சிங்கம்,  சுந்தரபாண்டியன் போன்ற படங்கள் நம் கண் முன் வந்து செல்கிறது. கதை, கதைக்களம், சண்டை, சோகம், பாசம், அடிதடி, அட்வைஸ் என எல்லாமே ஓவர் டோஸ் ஆக தெரிகிறது. இயக்குனர் படம் முழுக்க ஜோதிகாவை முன்னிருத்த வேண்டும் என்ற கட்டாயத்தினாலோ என்னவோ அவரிடம் நடிப்பை வாங்க தவறிவிட்டதாக தோன்றுகிறது.

மற்றபடி, புதிதாக எதுவும் படத்தில் இல்லை. சூரி வந்து போகும் சில காட்சிகள் சற்று ஆறுதல் அளிக்கிறது. மேலும் ஜோதிகாவின் மேக்கப்பில் கவனம் செலுத்தாதது மிகப்பெரிய குறை.

இதை ஷேர் செய்திடுங்கள்:

View all comments

வாசகர் கருத்து