முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நேபாளத்தில் நிலநடுக்கம்

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      உலகம்
Image Unavailable

Source: provided

நேபாளத்தில் நேற்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது. நேபாளத்தின் சிந்துபால்சவுக் மாவட்டத்தில் நேற்று மித அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டரில் 4.7 ஆக பதிவாகி உள்ளது. இதனை நேபாள நிலநடுக்கவியல் மையம் தெரிவித்து உள்ளது.  இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் பற்றிய விவரங்கள் எதுவும் உடனடியாக வெளியாகவில்லை.

________________

அழுவதற்கென்றே தனி அறை 

'அழுகை அறைக்கு வரவேற்கிறோம்' என்று வினோதமான வாசகத்துடன் வரவேற்கிறது ஸ்பெயினின் மாட்ரிக் நகரில் அமைந்துள்ள அழுகை அறை. மனநல பிரச்சினையால் அதிகரித்து வரும் தற்கொலைகளை தடுக்கும் வகையில் இந்த புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.  கவலைகள் தீரும் வகையில் மனம் திறந்து அழுவதற்காக இந்த அழுகை அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. 

இந்த அறையில் உளவியல் மருத்துவர் உட்பட மனச்சோர்வடையும் போது அழைக்கக்கூடிய நபர்களின் பெயர்களுடன் ஒரு மூலையில் தொலைபேசிகள் உள்ளன, அவர்களைத் தொடர்பு கொண்டு பேசியும் ஆறுதல் பெறும் வகையில் இந்த அறைகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.

______________

கொரோனா பாதிப்பு உயர்வு 

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. வைரஸ் தொற்றின் இரண்டாவது அலை உருவாகி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையிலும் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இந்நிலையில் தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 24.14 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 24,14,71,382 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 21,86,99,505 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 49 லட்சத்து 14 ஆயிரத்து 090 பேர் உயிரிழந்துள்ளனர். 

_____________

பாதுகாப்பற்ற சூழலில் பெண்கள்

பாகிஸ்தானில் பெண்களின் பாதுகாப்பு குறித்து கராச்சி நகரை சேர்ந்த சந்தை ஆராய்ச்சியாளர் ஆய்வு மேற்கொண்டார். இதில் பாகிஸ்தானின் பல்வேறு நகரங்களை சேர்ந்த சுமார் 18 ஆயிரம் பேரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வில், பாகிஸ்தானில் 35 சதவீதத்தினர் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளனர். 45 சதவீதம் பேர் பெண்கள் ஓரளவு பாதுகாப்பாக உள்ளனர் என்றும், 20 சதவீதம் பேர் பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளனர்.

இதில் குறிப்பாக, கைபர் பக்துன்இக்வா என்ற பகுதியில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லை என்று 40 சதவீத பேர் கருத்து தெரிவித்துள்ளனர். தொடர்ந்து இங்கு பெண்கள் பாதுகாப்பு ஓரளவு பரவாயில்லை என்று 35 சதவீதத்தினரும், பெண்கள் முழுமையாக பாதுகாப்பாக உள்ளனர் என்று 19 சதவீத பேரும் தெரிவித்துள்ளனர்.

______________

ஸ்பெயின்: விமானசேவை பாதிப்பு

ஸ்பெயின் லா பால்மா விமான நிலைய சுற்றுவட்டார பகுதிகளில் எரிமலை துகள்கள் காற்றில் கலந்து அதிகளவில் காணப்படுவதால் விமான போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. ஏறத்தாழ ஒரு மாத காலமாக கூம்பரே பியகா  எரிமலை வெடித்து தீக்குழம்பை கக்கி வருகிறது. எரிமலைக் கழிவின் துகள்கள் காற்றில் கலந்து நகர பகுதிகள் புகை சூழ்ந்து காட்சியளிக்கின்றன.

எரிமலை சீற்றத்தை காண கடந்த சில நாட்களாக சுற்றுலா பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து உள்ள நிலையில் திடீர் புகைமண்டலத்தால் பல்வேறு விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. எரிமலை சீற்றத்தைக் காண வந்த பயணிகள் விமானம் கிடைக்காமல் ஏமாற்றமடைந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து