முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்திய அணிக்காக ஆலோசகர் பணியை தொடங்கினார் டோனி

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

துபாய் : டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணிக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் கேப்டன் டோனி துபாயில் தன்னுடையை பணியை தொடங்கியிருக்கிறார்.

8 இடங்களை...

ஐசிசி டி20 உலகக் கோப்பை போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெற்று வருகிறது. இப்போது சூப்பர் 12 சுற்றில் இடம்பெறும் அணிகளுக்கான தகுதிச் சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகிறது. டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து, இந்தியா, ஆஸ்திரேலியா உள்பட தரவரிசையில் முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடுகின்றன. இந்திய அணி சூப்பர் 12 சுற்றில் தனது முதலாவது ஆட்டத்தில் பாகிஸ்தானை வருகிற 24 ஆம் தேதி சந்திக்கிறது.

ஆலோசகராக... 

டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி கடந்த மாதம் அறிவிக்கப்பட்டது. அப்போது இந்திய அணியின் ஆலோசகராக முன்னாள் கேப்டன் டோனி நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட் அணிக்கு 2007 ஆம் ஆண்டு தலைமை தாங்கிய டோனி முதல் முறையாக டி20 உலகக் கோப்பையை பெற்றுத் தந்தார். எனவே அவரது அனுபவம் இந்திய அணிக்கு பேருதவியாக இருக்கும் என்பதால் பி.சி.சி.ஐ இத்தகைய முடிவு எடுத்துள்ளது. இப்போது டோனி தலைமையிலான சிஎஸ்கே அணி ஐபிஎல் கோப்பையையும் வென்றதால் டோனி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

பி.சி.சி.ஐ வரவேற்பு...

டி20 உலகக் கோப்பையின் முதல் பயிற்சி ஆட்டம் இன்று இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற இருக்கிறது. இந்நிலையில் இந்திய அணியினருடன் நேற்று இணைந்த டோனி வீரர்களுக்கு பேட்டிங் ஆலோசனைகளை வழங்கினார். அந்தப் புகைப்படங்களை பி.சி.சி.ஐ தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது. மேலும் "இந்திய அணியின் புதிய பொறுப்புக்கு வரவேற்கிறோம்" என தெரிவித்திருந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து