முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

டி-20 உலக கோப்பை கிரிக்கெட்: வங்கதேசத்தை வீழ்த்தியது ஸ்காட்லாந்து

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

அல் அமீரத் : டி-20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் 6 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வங்கதேசத்தை வென்றது ஸ்காட்லாந்து.

பீல்டிங் தேர்வு...

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் முதல் சுற்று போட்டிகள் தொடங்கின. இந்த சுற்றில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் மோதுகின்றன. முதல் சுற்று போட்டியின் 2-வது ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. 

140 ரன்கள்...

அதன்படி, முதலில் பேட் செய்த ஸ்காட்லாந்து அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 140 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக கிறிஸ் கிரீவ்ஸ் 45 ரன்கள் அடித்தார். வங்கதேசம் சார்பில் மஹதி ஹசன் 3 விக்கெட்டும், ஷாகிப் அல் ஹசன், முஸ்தாபிகுர் ரஹ்மான் ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.  இதையடுத்து 141 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் வங்கதேசம் அணி களமிறங்கியது. முஷ்பிகுர் ரஹிம் ஓரளவு தாக்குப் பிடித்து 38 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் தாக்குப் பிடிக்கவில்லை.

அபார வெற்றி...

இறுதியில், வங்கதேசம் 7 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன்மூலம் ஸ்காட்லாந்து அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஸ்காட்லாந்து சார்பில் பிராட்லி வீல் 3 விக்கெட்டும், கிறிஸ் கிரீவ்ஸ் 2 விக்கெட்டும் வீழ்த்தினர். ஆட்ட நாயகன் விருது ஸ்காட்லாந்தின் கிறிஸ் கிரீவ்ஸ்க்கு அளிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து