முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தேசிய ஜூனியர் எறிப்பந்து: தமிழக அணிகள் அறிவிப்பு

திங்கட்கிழமை, 18 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

Source: provided

31-வது தேசிய ஜூனியர் எறிப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி வருகிற 20-ந் தேதி முதல் 23-ந் தேதி வரை உத்தரபிரதேச மாநிலம் கோராக்பூரில் நடக்கிறது. இந்தப்போட்டிக்கான தமிழக அணிகளை தமிழ்நாடு எறிப்பந்து சங்க தலைவர் டி.பாலவிநாயகம் அறிவித்து உள்ளார். அணி விவரம்: 

ஆண்கள்:- சிவபிரசாத் (கேப்டன்), ஜோதீஸ்வரன், பிரவின், ஹேம்நாத் (சென்னை), வீரராகவன், ஹர்மான்(திருவள்ளூர்), யோகேஷ்வரன், விக்னேஷ், மனோ (திண்டுக்கல்), அருண்குமார், ஜிஸ்னு, கிஷோர் (நீலகிரி), ரமணிதரன் (கரூர்), லோகேஸ்வரன் (திருவண்ணாமலை).

பெண்கள்:- பியூலா ஜாய்ஸ் (கேப்டன்), மாலினி, வர்ஷா (செங்கல்பட்டு), இளவேனில், பத்மினி, தீக்ஷிதா (சென்னை), ஜெசிந்த் கிப்டி, ஹர்சிதா, பிரியதர்ஷினி (திருவள்ளூர்), இவாஞ்சல் அலின், சஹானா (திண்டுக்கல்), பூஜா (கரூர்), மணிஸ்ரீ (மதுரை), மோனிஷா (திருவண்ணாமலை).

______________

முன்னாள் வீரர் யுவராஜ் கைதாகி விடுதலை 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் அதிரடி பேட்ஸ்மேன் யுவராஜ் சிங். இவர் கடந்த ஆண்டு இன்ஸ்டாகிராம் வீடியோவில் யுஸ்வேந்திர சாகலுடன் பேசிய போது சாதி ரீதியிலான சில வார்த்தைகளை பயன்படுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பட்டியலின மக்களை இழிவுபடுத்தி பேசியதாக கூறி வக்கீல் ஒருவர் அரியானா போலீசில் புகார் அளித்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்தநிலையில் இந்த வழக்கில் யுவராஜ் சிங் கைது செய்யப்பட்டார். பின்னர் சில மணி நேரத்தில் அவர் ஜாமினில் விடுதலையானார். முன்னதாக தனது பேச்சுக்காக அவர் வருத்தம் தெரிவித்து இருந்தார்.

____________

டி-20 போட்டியில் சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசன்

20 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தொடங்கிய நிலையில், முதல் சுற்று லீக் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து, வங்கதேசம் அணிகள் மோதுகின்றன. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி பீல்டிங்கைத் தேர்வு செய்தது. வங்கதேசம் அணியின் ஆல் ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன்,  2 விக்கெட் வீழ்த்தினார். இதன்மூலம், சர்வதேச 20 ஓவர் போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய இலங்கை வீரர் மலிங்காவின் சாதனையை முறியடித்தார். 

மொத்தம் 80 டி20 போட்டிகளில் விளையாடி உள்ள ஷாகிப் அல் அசன், மொத்தம் 108 விக்கெட்டுகளை கைப்பற்றி உள்ளார். மலிங்கா 107 விக்கெட்டுகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.  20 ஓவர்  கிரிக்கெட் போட்டிகளில் 100க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000-க்கும் அதிகமான ரன்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை ஷாகிப் அல் ஹசன் பெற்றுள்ளார். உலக சாதனை படைத்த ஷாகிப் அல் ஹசனுக்கு வங்கதேச கிரிக்கெட் வாரியம் வாழ்த்து தெரிவித்துள்ளது. 

______________

ஷர்துல் தாக்கூருக்கு சேவாக் பாராட்டு

ஷர்துல் தாக்கூர் தான் இந்த சீசனில் சிஎஸ்கேவுக்காக அதிக விக்கெட் வீழ்த்தியவர். 11வது ஓவரில் பந்துவீச வந்து இரண்டு விக்கெட்களை வீழ்த்தியிருக்கிறார். சிஎஸ்கேவில் தாக்கூர் இணைந்த பின்னர் அவரின் தலையெழுத்தே மாறிவிட்டது. 2018ம் ஆண்டு தாக்கூர் சிஎஸ்கேவில் இணைந்தார். அதற்கு முன்னரே அவர் இந்திய அணிக்காக ஒரு நாள் மற்றும் டி20 போட்டிகளில் விளையாடியிருக்கிறார். சிஎஸ்கேவில் இணைவதற்கு முன்னர் அணியில் அவருக்கு நிலையான இடம் கிடையாது. 

ஆனால் தற்போது ஒரு நாள், டி20, டெஸ்ட் அணியிலும் கூட இடம்பிடித்துவிட்டார். நான் ஏற்கனவே சொன்னது போல அவர் சிஎஸ்கேவில் இணைந்த பின்னர் அவரின் தலையெழுத்தே மாறிவிட்டது. அதற்காக அவர் சிஎஸ்கேவில் இணைந்தது மட்டுமே காரணம் அல்ல, அவர் சிறப்பாக விளையாடி விக்கெட்களையும் வீழ்த்திருப்பதாலும் என்று சேவாக் தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து