முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொய் வழக்குகளை கண்டு அ.தி.மு.க. அஞ்சாது : எடப்பாடி பழனிசாமி

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      அரசியல்
Image Unavailable

Source: provided

ஆத்தூர் : ஆத்தூர் அருகே நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி நிர்வாகிகள் மீது போடப்படும் பொய் வழக்குகளை கண்டு அ.தி.மு.க. அஞ்சாது என்று பேசினார்.

அ.தி.மு.க. பொன்விழா ஆண்டையொட்டி தமிழகம் முழுவதும் உள்ள அக்கட்சி நிர்வாகிகள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே உள்ள தலைவாசல் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற அ.தி.மு.க. பொன்விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் அவர் அங்கு பேசியதாவது.

கொரோனா காலகட்டம் என்பதால் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்களால் வாக்களித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்க முடியவில்லை. சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டமன்ற தொகுதிகளில் 10 சட்டமன்ற தொகுதியில் வெற்றியை பெற்றுத்தந்த பொதுமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நிர்வாகிகள் மீது தி.மு.க. அரசால் பொய் வழக்கு போடப்படுகிறது. இந்த பொய் வழக்குகளுக்கு எல்லாம் அ.தி.மு.க. அஞ்சாது. எம்.ஜி.ஆர். இருக்கின்ற போது பல்வேறு சோதனைகளுக்கு உள்ளானார், அதையெல்லாம் உடைத்தெறிந்து சாதனை படைத்த தலைவர் உருவாக்கிய கட்சி அ.தி.மு.க.என்று பேசினார்.

தற்போது நடைபெற்று முடிந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தல் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதா? என கேள்வி எழுப்பிய அவர், அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் ஜனநாயக முறைப்படி தேர்தல் நடத்தியதாகவும் தற்போது நடைபெற்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களையும் தோல்வியுற்றவர்களாக அறிவித்துள்ளனர் என்று விமர்சனம் செய்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 6 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago
View all comments

வாசகர் கருத்து