முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தரவரிசையில் பாவ்லா முன்னேற்றம்

செவ்வாய்க்கிழமை, 19 அக்டோபர் 2021      விளையாட்டு
Image Unavailable

பிஎன்பி பாரிபாஸ் ஓபன் டென்னிசில் மகளிர் ஒற்றையர் பட்டத்தை கைப்பற்றிய ஸ்பெயினின் இளம் வீராங்கனை பாவ்லா படோசா, டபிள்யூடிஏ தரவரிசையில் 27ம் இடத்தில் இருந்து, முன்னேறி 13ம் இடத்தை பிடித்துள்ளார். பாரிபாஸ் ஓபன் ஆடவர் ஒற்றையர் பட்டத்தை வென்ற இங்கிலாந்து வீரர் கேமரோன் நாரியும் ஏடிபி தரவரிசையில் 26ம் இடத்தில் இருந்து, 16ம் இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

கலிபோர்னியா மாகாணத்தின் இண்டியன்வெல்ஸ் நகரில் பாரிபாஸ் ஓபன் டென்னிஸ் போட்டி நடந்தது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் பைனலில் ஸ்பெயினின் இளம் வீராங்கனை பாவ்லா படோசா, பெலாரசின் விக்டோரியா அசரென்காவை வீழ்த்தி, சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். இந்த வெற்றியின் மூலம் சர்வதேச மகளிர் டென்னிஸ் ஒற்றையர் தரவரிசையில் (டபிள்யூடிஏ) 27ம் இடத்தில் இருந்த அவர், அதில் இருந்து 14 இடங்கள் முன்னேறி தற்போது, 3,248 புள்ளிகளுடன் 13ம் இடத்தை பிடித்துள்ளார். 

கோலியின் அறிவுரைக்கு எதிர்ப்பு 

விராட் கோலி தன் அதிகாரபூர்வ ட்விட்டர் கணக்கில் இந்த தீபாவளி பண்டியைகை எப்படி அர்த்தமுள்ளதாகக் கொண்டாடுவது என சில குறிப்புகளைப் பகிர உள்ளதாகக் கூறி இருந்தார். ஆனால், அவருடைய இந்த கருத்துக்கு பலத்த எதிர்ப்பு சமூக ஊடகங்களில் காணப்படுகிறது. 

எங்கள் பண்டிகைகளைக் கொண்டாட எங்களுக்குத் தெரியும், அதற்கு உங்கள் ஆலோசனைகள் தேவை இல்லை என்கிற ரீதியில் சிலரிடமிருந்து எதிர்ப்பு கிளம்பியுள்ளது. கோலியின் அந்த ட்விட்டர் பதிவு பதிலளிக்கும் வகையில் பலரும் தங்களுடைய எதிர்வினைகளை பதிவு செய்து வருகின்றனர்.

அடுத்த சுற்றில் பி.வி.சிந்து

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டிகள் டென்மார்க் நாட்டில் நடந்து வருகின்றன.  இதில், மகளிர் ஒற்றையர் முதல் சுற்று போட்டியில் இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மற்றும் துருக்கி நாட்டை சேர்ந்த நெஸ்லிஹான் யிஜித் இன்று விளையாடினர்.  30 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் 21-12, 21-10 என்ற புள்ளி கணக்கில் சிந்து வெற்றி பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இதற்கு முன் நேற்று நடந்த மற்றொரு போட்டியில் ஆடவர் ஒற்றையர் பிரிவில், இந்தியாவின் ஸ்ரீகாந்த் கிதம்பி மற்றும் சாய் பிரணீத் ஆகியோர் விளையாடினர். இதில் 21-14, 21-11 என்ற கணக்கில் கிதம்பி வெற்றி பெற்றார்.  போட்டி 30 நிமிடங்களில் முடிந்தது.  இதனை தொடர்ந்து அடுத்த சுற்றுக்கு அவர் முன்னேறியுள்ளார்.  பிரணீத்துக்கு எதிராக விளையாடி தொடர்ந்து 3 போட்டிகளில் கிதம்பி வெற்றி பெற்றுள்ளார்.

ஆப்கானுக்கு காம்பீர் ஆதரவு

ஆப்கானிஸ்தான் அணி குறித்து முன்னாள் கிரிக்கெட் வீரர் கவுதம் காம்பீர் அளித்த பேட்டியில், ”இந்தியாவுடன் முதல் போட்டியில் மோதுவதால், பாகிஸ்தானிடமிருந்து எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால், தற்போதைய நிலையில் பாகிஸ்தானை விட இந்திய அணியே வலிமையாக உள்ளது. டி20 கிரிக்கெட்டில் யார் வேண்டுமானாலும் யாரையும் வெல்ல முடியும். ஏனெனில் இது மிகவும் தனிப்பட்ட வடிவ கிரிக்கெட்டாகும். இங்கு நாம் எந்த அணியையும் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக்கூடாது. 

 

உதாரணமாக, ஆப்கானிஸ்தானை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக்கூடாது. ரஷீத் கான் போன்றவர்கள் தொடரில் மிகப்பெரிய குழப்பங்களை உருவாக்கலாம். பாகிஸ்தானுடனும் அதே நிலைமை தான். அன்றைய தினம் சிறப்பானதாக இருந்தால், அவர்களும் நிச்சயம் தாக்கம் ஏற்படுத்துவார்கள். இந்த டி20 உலகக் கோப்பையில் ஒரு அணியைப் பற்றி நீங்கள் பேச விரும்பினால், அது ஆப்கானிஸ்தானாக இருக்க வேண்டும் என்று நான் நம்புகிறேன் என்று கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து